பெங்களூர் மேயர் தேர்தலில் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதா? தடை கேட்டு கோர்ட் படியேறுகிறது பாஜக
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் கவுன்சிலர்கள் மட்டுமல்லாது எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் செய்ய உள்ளது.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் பாஜகவும், 76 இடங்களில் காங்கிரசும், 14 இடங்களில் ம.ஜ.தவும் வென்றன. சுயேச்சைகள் 8 வார்டுகளில் வெற்றிக்கொடி நாட்டினர். அதில், ஒரு சுயேச்சை பிற்பாடு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், மேயர் பதவியை தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் கவுன்சிலர்கள் மட்டுமின்றி, பெங்களூர் நகர தொகுதிகளை சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள், மற்றும் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த தலா 3 எம்.பிக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாகும்.
கடந்த முறை நடந்த மேயர் தேர்தலின்போது, மேயரை தேர்ந்தெடுக்க 128 வாக்குகள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் இம்முறை, எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அது 131 வாக்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அனைத்தையும் கூட்டினாலும் பாஜகவிடம் இருப்பது 126 வாக்குகள்தான்.
காங்கிரசிடம் 101 வாக்குகளும், ம.ஜ.தவிடம் 21 வாக்குகளும் உள்ளன. ஏற்கனவே சுயேச்சைகளில் ஒருவர் பாஜகவில் இணைந்துவிட்டார். எனவே இன்னும் எஞ்சியுள்ள 7 சுயேச்சைகளையும் தன்பக்கம் இழுக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாஜக உள்ளது. குறைந்தது 5 சுயேச்சைகளையாவது இழுக்க வேண்டும்.
இந்நிலையில், கவுன்சிலர்களை தவிர்த்த பிற உறுப்பினர்கள் மாநகராட்சியில் வாக்களிக்கும் நடைமுறையை ரத்து செய்ய கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் பாஜக வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பசவகல்யாண் நகராட்சியில் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க தடை விதித்து சமீபத்தில் ஹைகோர்ட் உத்தரவிட்டதை முன்மாதிரியாக கொண்டு பாஜகவும் வாதிட திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற தடை கிடைத்தால் மேயர் வேட்பாளரைவவ வெற்றிபெறச் செய்ய 100 வாக்குகளே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications