டோணிக்கு இந்த கதியா? அதிருப்தியில் ரசிகர்கள்
Recommended Video

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செய்துள்ள இந்த ஒரு செயல், டோணி ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
2017-18ம் ஆண்டுக்கான, ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதுவரை ஏ, பி, சி என மூன்று பிரிவுகளின்கீழ் வீரர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இவ்வாண்டு புதிதாக A+ என்ற ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு, அதில் 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரோகித்துக்கு ஏ பிளஸ்சாம்
இந்த பிரிவில் கேப்டன் விராட் கோஹ்லி, ஷிகர் தவான், ஃபார்மிலேயே இல்லாத ரோகித் ஷர்மா, பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகிய ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், முன்னணி வீரர் டோணிக்கு அந்த இடம் வழங்கப்படவில்லை. ஏ பிளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடி வழங்கப்படும்.

ஊதிய உயர்வு
டோணி ஏ பிரிவில் தொடருகிறார். ஜடேஜா, அஸ்வின், புஜாரா, முரளி விஜய், ரஹானே, விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா உள்ளிட்டோர் ஏ பிரிவில் உள்ள பிற வீரர்களாகும். இதில் சாஹாவுக்கு பி பிரிவில் இருந்து புரமோஷன் கொடுத்து ஏ பிரிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகும். முன்பு இந்த பிரிவுக்கு ஊதியமாக ரூ.2 கோடி வழங்கப்பட்டு வந்தது.

பவுலர்கள்
ஹர்திக் பாண்ட்யா, சஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியமாகும். ஊதியங்களை உயர்த்தியுள்ளபோதிலும், டோணிக்கு ரோகித் ஷர்மா, தவான் போன்றோர் இடம் பெற்றுள்ள பிரிவில் கூட இடம் கொடுக்காதது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

டோணிக்கு இந்த நிலையா
டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை போட்டிகளிலும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியவரும், உலக அளவில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவருமான டோணி 2வது கட்ட பிரிவில் வைக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே 26 பேர் கொண்ட இந்த ஒப்பந்த பட்டியலில், முகமது ஷமி பெயர் சேர்க்கப்படவில்லை. அவரது மனைவி ஷமி பற்றி சில புகார்களை பகிரங்கமாக கூறிய நிலையில், இந்த முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளதாக தெரிகிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications