அடடா ரொம்ப சங்கட்டமா இருக்கே.. ஃபீல் பண்ணும் 'திருமதி இந்தியா'!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தேர்தல் களத்தில் குதித்து விட்டு இப்போது ஏண்டா போட்டியிட முடிவு செய்தோம் என்று தர்மசங்கடத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பெண்.

இவர் ஒரு சுயேச்சை வேட்பாளர். சுயேச்சை வேட்பாளருக்கு என்ன தர்மசங்கடம் ஏற்படப் போகிறது என்று நினைக்கலாம். ஆனால் இவரோ விஐபி சுயேச்சை வேட்பாளராச்சே.. எனவே தர்மசங்கடங்கள் எக்கச்சக்கம்.

நல்லவேளை, 'நக்மா ரேஞ்சுக்கு' நமக்கு சிக்கல் வரவில்லையே என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் தொகுதியை வளைய வந்து கொண்டிருக்கிறார் இவர் - இவரது பெயர் ரூபி யாதவ், கடந்த ஆண்டு திருமதி இந்தியா பட்டத்தைப் பெற்ற அழகுப் பெண்.

ஆரம்பத்தில் அன்னாவுடன்

ஆரம்பத்தில் அன்னாவுடன்

ஆரம்பத்தில் அன்னா ஹஸாரே இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார் ரூபி.ஆனால் தற்போது தனியாக வந்து விட்டார்.

தெற்கு டெல்லியில் போட்டி

தெற்கு டெல்லியில் போட்டி

தெற்கு டெல்லியில் ரூபி யாதவ் களத்தில் நிற்கிறார். சுயேச்சையாக இவர் போட்டியிடுகிறார்.

எப்படி இப்படி அழகாக...??

எப்படி இப்படி அழகாக...??

இப்போது பிரசாரத்தில் குதித்துள்ள ரூபிக்கு ஏகப்பட்ட தர்மசங்கடங்கள். போகும் இடமெல்லாம் எப்படி நீங்க கல்யாணத்துக்கு அப்புறமும் அழகா இருக்கீங்க என்று பெண்கள் சுற்றி நின்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்களாம்.

தலைமுடி நல்லாருக்கே..!

தலைமுடி நல்லாருக்கே..!

பல பெண்கள், இவரது ஹேர் ஸ்டைலை புகழ்ந்து தள்ளுகிறார்களாம். பலர் இது ஒரிஜினால இல்லை சவுரி முடியா என்று கேட்டு தொட்டுப் பார்த்துத் தடவிக் கொடுக்கிறார்களாம்.

வாயைப் பார்க்காதீங்கப்பா...!

வாயைப் பார்க்காதீங்கப்பா...!

பலரும் இவர் பேசுவதைக் கேட்பதை விட இவரது வாயையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். தனது அழகுதான் அவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்கிறார் ரூபி செல்லமாக அலுத்துக் கொண்டபடி.

ரொம்பச் சங்கட்டமா இருக்கே!

ரொம்பச் சங்கட்டமா இருக்கே!

போகும் இடமெல்லாம் நல்ல கூட்டம்கூடினாலும் தான் சொல்வதை விட தான் பேசுவதை விட தன்னையே அனைவரும் உற்றுப் பார்ப்பது மிகவும் சங்கடமாக இருப்பதாக கூறுகிறார் ரூபி.

3 மாதத்துக்கு முன்னாடி வரை

3 மாதத்துக்கு முன்னாடி வரை

இதுகுறித்து அவர் கூறுகையில் 3 மாதத்துக்கு முன்பு வரை நான் நன்கு ஸ்லிம்மாகதான் இருந்தேன். தற்போது வெயிலில் பிரசாரம் செய்வதால் சற்று கருத்து விட்டேன். உடம்பும் சற்றுப் பெருத்து விட்டது. இருந்தாலும் என்னைப் பார்த்து பலரும் புகழ்கிறார்கள் என்றார்.

எங்க ஆம்பளைங்க ஓட்டெல்லாம் ரூபிக்குத்தான்

எங்க ஆம்பளைங்க ஓட்டெல்லாம் ரூபிக்குத்தான்

ஜேஜே கிளஸ்டர் பகுதியைச் சேர்ந்த சுனிதா என்ற பெண் கூறுகையில், எங்க ஏரியாவில் வசிக்கும் அத்தனை ஆண்களும் ரூபிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார்.

அதெல்லாம் கிடையாது...!

அதெல்லாம் கிடையாது...!

ஆனால் கிருஷ்ணா என்ற பெண் சற்று மாற்றி யோசித்துப் பேசினார். அவர் கூறுகையில், அழகெல்லாம் பிறகுதான். முதலில் எங்களது பகுதி தண்ணீர்ப் பிரச்சினையை யார் தீர்க்கிறார்களோ அவர்களுக்கே வாக்களிப்போம் என்றார் உஷாராக.

அக்கா ஆட்டோகிராப்!

அக்கா ஆட்டோகிராப்!

ரூபி பளிச்சிடும் அழகுடன், கண்ணைப் பறிக்கும் உடையுடன்தான் தெருவில் இறங்கி பிரசாரம் செய்கிறார். அவரைப் பார்த்ததுமே கூட்டம் கூடி விடுகிறது. பலர் ஆட்டோகிராப் கேட்பார்களாம். பல இளம் பெண்கள் உங்களைத் தொட்டுப் பார்க்கட்டுமா என்று கூட ஆசையுடன் கேட்பார்களாம்.

திரினாமூலில் கூப்ட்டாக...!

திரினாமூலில் கூப்ட்டாக...!

இவருக்கு திரினமூல் காங்கிரஸ்தான் இதே தொகுதியில் டிக்கெட் தருவதாக இருந்தது. ஆனால் அன்னாவுக்கும், மமதா பானர்ஜிக்கும் திடீரென லடாய் வந்ததால் மமதா கட்சியின் டிக்கெட்டை நிராகரித்து விட்டாராம் ரூபி.

குடிசைப் பகுதிகள்தான் முக்கியம்

குடிசைப் பகுதிகள்தான் முக்கியம்

34 வயதாகும் ரூபி, குடிசைப் பகுதிகளைக் குறி வைததுத்தான் வாக்கு சேகரித்து வருகிறாராம். அவர்கள்தான் உண்மையான இந்திய மக்கள். அவர்களுக்காக நான் கடந்த 10 வருடமாக பாடுபட்டு வருகிறேன் என்று கூறுகிறார் ரூபி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+