மாட்டிறைச்சி சாப்பிட்டதாக புகார்- ராஜஸ்தான் பல்கலை.யில் 4 காஷ்மீர் மாணவர்கள் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் மேவார் பல்கலைக் கழக விடுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக 4 ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் மேவார் பல்கலைக் கழகத்தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் சிலர் விடுதி அறையில் இறைச்சி உணவை சாப்பிட்டுள்ளனர்.

உடனே சில மாணவர்கள் வெளியே உள்ள இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பசுமாட்டு இறைச்சி சாப்பிடுவதாக கூறினர். இதனைத் தொடர்ந்து விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர், பசுமாட்டிறைச்சி சாப்பிட்ட மாணவர்களை கைது செய்ய கோரி மறியல் போராட்டம் நடத்தினர்.
அத்துடன் பசுமாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக கூறி இறைச்சி கடை ஒன்றையும் தீ வைத்தனர். இதனால் மேவார் பல்கலைக் கழக பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இறைச்சி சாப்பிட்ட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டிறைச்சியைதான் அவர்கள் சாப்பிட்டதும் தெரியவந்தது.
இதனை போராட்டம் நடத்திய இந்துத்துவா அமைப்பினரிடம் கூறிய போதும் அவர்கள் இதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே மேவார் பல்கலைக் கழக துணைவேந்தர் அசோக் காடியா, பல்கலைக் கழக விடுதியில் எந்த ஒரு இறைச்சி உணவுக்கும் அனுமதி கிடையாது. மாணவர்கள் இதை மீறி இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் இதேபோல் பசுமாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி அக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர் இந்துத்துவா அமைப்பினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications