உதய்பூர் டெய்லர் கதிதான்..தலையை வெட்டுவோம்னு மிரட்டல் வருது.. மாஜி பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்லாமியர்கள் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்ததால் பாஜகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நவீன் ஜிண்டால், தமக்கும் ராஜஸ்தான் டெய்லரை படுகொலை செய்தது போல கொல்வோம் என மிரட்டல் வருவதாக பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் நிர்வாகிகள் இருந்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் டிவி மற்றும் சமூக வலைதளங்களில் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தை விமர்சித்திருந்தனர். இது நமது நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பிரச்சனையாக உருவானது. நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவருக்காக மத்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல நாடுகள் வலியுறுத்தின. மத்திய அரசும் இது தொடர்பாக பல்வேறு விளக்கங்களைக் கொடுத்தது.

போராட்டம்- வன்முறை

போராட்டம்- வன்முறை

இதன்பின்னர் நுபுர் சர்மாவை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் நவீன் ஜிண்டாலை டிஸ்மிஸ் செய்தும் அக்கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் வன்முறையாகவும் மாறியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ராஜஸ்தான் படுகொலை

ராஜஸ்தான் படுகொலை

இந்நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துகளை ஆதரித்ததற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி உள்ளது. அத்துடன் தாங்களே இந்த படுகொலையை செய்ததாக இஸ்லாமிய இளைஞர்கள் இருவர் வீடியோவையும் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த இரு இஸ்லாமிய பயங்கரவாதிகளை போலிசார் கைது செய்தனர்.

என்.ஐ.ஏ. விசாரணை

என்.ஐ.ஏ. விசாரணை

இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. டெய்லரைப் படுகொலை செய்த பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் ஸ்லீப்பர் செல்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இந்த இரு தீவிரவாதிகளுடன் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல்

நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல்

இந்நிலையில் நபிகள் நாயகம் விவகாரத்தில் தொடர்புடைய மாஜி பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால் பகீர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நவீன் ஜிண்டால் கூறுகையில், உதய்பூர் டெய்லர் தலை துண்டிக்கப்பட்ட வீடியோவுடன் மிரட்டல் இ மெயில்கள் எனக்கு வந்துள்ளன. உதய்பூர் டெய்லர் கொல்லப்பட்ட போல என்னையும் என் குடும்பத்தினரையும் வெட்டி படுகொலை செய்யப் போவதாக அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளோம் என்றார். நவீன் ஜிண்டாலுக்கு வந்த மேலும் சில மெயில்களும், இந்த முறை உங்களது தலை வெட்டப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+