Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்ப சார் பதில் தருவீங்க.. பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதிய முதல்வர் மம்தா

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு மாநில திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மத்திய பாஜக அரசுகளிடையே அரசியல் சண்டையையும் உருவாக்கியுள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக புகார் கூறி வருகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட இந்த சம்பவம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

mamta banerjee narendra modi

இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடந்த 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி, இரண்டாவது முறையாக மீண்டும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஆகஸ்ட் 22ம் தேதி அனுப்பிய கடிதத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தியிருந்தேன். இது போன்ற முக்கியமான பிரச்னைக்கு உங்களிடமிருந்து பதில் வரவில்லை. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து பதில் வந்தது. ஆனால், அவர்கள் பிரச்னையின் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ளவில்லை.

எங்கள் மாநிலத்தில் ஏற்கனவே இதுதொடர்பாக எடுக்கப்பட்டு வரும் சில நடவடிக்கைகளை குறிப்பிட விரும்புகிறேன். மாநிலம் முழுவதும் 88 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 62 போக்சோ நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க, 10 பிரத்யேக போக்சோ (POCSO) நீதிமன்றங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். வழக்குகளைக் கண்காணித்தல் மற்றும் முடித்துவைப்பது ஆகிய இரண்டும் நீதிமன்றம் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மத்திய அரசின் வழிகாட்டல் படி, விரைவு சிறப்பு நீதிமன்றங்களில், ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளை மட்டுமே பணியமர்த்த முடியும். பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நிரந்தர நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் 112, 1098 ஆகிய உதவி எண்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளன.

அவசரகாலங்களில் உதவி எண் 100 மக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். இதுபோன்ற வழக்குகளை விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை தேவை. அதற்கு பாலியல் வன்கொடுமை, வன்முறை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களுக்கு முன்மாதிரியான கடுமையான தண்டனை வழங்கும் வகையிலான சட்டத்தை இயற்றுவதற்கு பரிசீலிக்குமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+