பெங்காலி நடிகை தூக்கு போட்டு தற்கொலை - அழுகிய நிலையில் சடலம் மீட்பு
பெங்காலி நடிகை பிடாஸ்டா சாஹா தூக்கு போட்ட நிலையில் அவரது படுக்கை அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா : ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளின் வாழ்க்கை சோகமயமானதாகவே முடிந்து விடுகிறது. பெங்காலி நடிகை பிடாஸ்டா சாஹா என்பவர் தூக்கு போடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அழுகிய நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர்.
தற்கொலை செய்து கொண்ட நடிகையின் பெயர் பிடாஸ்டா சாஹா. இவர் பல படங்களில் நடித்துள்ளார். கொல்கத்தாவில் கஸ்பா பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அவரது தயார் வெளியூரில் வசித்து வந்தார். தனது மகள் பிடாஸ்டாவுக்கு 2 நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். பதில் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் தனது மகளை நேரில் காண அவரது வீட்டுக்கு வந்தார்.

கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் தட்டினார். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கு வீட்டிற்குள் சென்றனர். அங்கு, பிடாஸ்டாவின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது.
அவரது உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. உடலிலும் சில இடங்களில் காயங்கள் காணப்பட்டன. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நடிகை பிடாஸ்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு சோகமயமான கருத்துக்களையே பதிவு செய்திருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
மன உளைச்சலில் இருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்காலி நடிகை திஷா கங்குலி இதே போல தூக்கு போடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இப்போது பிடாஸ்டாவும் அதே போல தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications