ஆர்எஸ்எஸ் பிரமுகர் வெட்டிக் கொலை.. பெங்களூரின் சிவாஜிநகர் பகுதியில் இன்று பந்த்
பெங்களூர்: ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையை தொடர்ந்து பெங்களூரின், சிவாஜிநகர் பகுதியில் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிவாஜிநகர் மண்டல் தலைவரும், அப்பகுதி பாஜக செயலாளருமான ருத்ரேஷ் நேற்று காலை நண்பர்களுடன் கடைத்தெருவில் பேசிக்கொண்டிருந்தபோது வெட்டி கொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த இருவர் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பியோடினர். அருகேயிருந்தவர்கள் அவரை, மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

கொலையாவதற்கு சற்றுமுன்புதான், சிவாஜிநகர் அருகேயுள்ள மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், ருத்ரேஷ் பங்கேற்று திரும்பியிருந்தார்.
இக்கொலையை கண்டித்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர், கமர்சியல் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தின் முன்பு தர்ணா நடத்தியதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பெரும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், ருத்ரேஷ் கொலையை கண்டித்து, இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்த ஆர்எஸ்எஸ் அழைப்புவிடுத்திருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. இதனால் அங்கு கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கமர்சியல் தெரு, சிவாஜிநகர், பாரதி நகர் மற்றும் பிரேசர் டவுன் ஆகிய அக்கம்பக்கத்து 4 காவல் சரகங்களிலும் இன்று 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சரகங்கள் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என்பதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications