சாலை தடுப்பில் மோதிய பஸ் தீக்கிரை: பயணிகள் மூவர் உயிர் ஊசல்
பெங்களூரு: சாலை சாலை தடுப்பில் தனியார் பஸ் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பஸ்சில் பயணித்த பயணிகள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிந்தாமணி நகரில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று மதியம் வந்து கொண்டிருந்தது. லட்சுமிவெங்கடேஷ்வரா டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பஸ் பெங்களூரு நகரின் கே.ஆர்.புரம் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதியது. குறுக்கே வந்த பைக்கில் மோதாமல் இருக்க பஸ் டிரைவர் முயன்று திருப்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

மோதிய வேகத்தில் பஸ்சின் டீசல் டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் பஸ் முழுவதிலும் தீ மளமளவென பரவியது. பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர். சிலர் ஜன்னல்கள் வழியாக கீழே குதித்து தப்பினர்.
தள்ளுமுள்ளு, தீ போன்றவற்றுக்குள் சிக்கி 4 பயணிகள் படுகாயமடைந்தனர். அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேஆர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications