பிறந்த நாள் பார்ட்டி பில்லை செலுத்தும் தகராறில் அண்ணனை கொன்ற தம்பி!
பெங்களூர்: பிறந்த நாள் பார்ட்டிக்கான செலவை செட்டில் செய்த விவகாரத்தில் சண்டை ஏற்பட்டு, அண்ணனை தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் இந்திராநகரை சேர்ந்தவரான ஆலன் ஜெரால்ட் (27), கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார். இவரது தம்பி சந்தோஷ் அந்தோணி, பெங்களூர் மெட்ரோ ரயில் கார்பொரேசன் நிறுவன கோச் தயாரிப்பு பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று, தங்கள் சகோதரி ஜூலியின் பிறந்த நாளையொட்டி, ரிச்மண்ட் டவுன் பகுதியிலுள்ள ஒரு 'பப்'புக்கு பார்ட்டி கொண்டாட இவர்கள் சென்றுள்ளனர். உறவுக்காரர்கள் சிலரும் உடன் சென்றுள்ளனர். இரவு 9.45 மணிக்கு பார்ட்டியை தொடங்கிய இவர்கள், 11.15 மணிக்கு, வெளியே வந்துள்ளனர்.
அப்போது பார்ட்டிக்கான ஹோட்டல் செலவை, கசின் பிரதர் ஒருவர் செலுத்திவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும், நீ ஏன் பணம் கொடுக்கவில்லை என்று ஆலன் ஜெரால்டிடம், சந்தோஷ் வாக்குவாதம் செய்துள்ளார். இருப்பினும் கசின் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால் ஆட்டோவிலும், அண்ணனுடன் சண்டை போட்டுள்ளார் சந்தோஷ்.
கோபமடைந்த ஆட்டோ டிரைவர் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டாராம். இதனால் சந்தோஷுக்கு கோபம் உச்சிக்கு சென்றது. அண்ணனை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் பிளாட்பாரத்தில் விழுந்த ஜெரால்ட் பரிதாபமாக உயிரிழந்தார். கசின் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications