வசுந்தர ராஜே 'ராஜ்ஜிய'த்துக்கு முடிவுரை- ராஜஸ்தான் பாஜக முதல்வராக பஜன் லால் சர்மா பதவியேற்றார்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வராக இன்று பஜன் லால் சர்மா பதவியேற்றார். பஜன் லால் சர்மா பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 25-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

வசுந்தர ராஜே சிந்தியா சகாப்தம் முடிவு: ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே அம்மாநில முதல்வர் யார் என்ற விவாதம் எழுந்தது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால் மற்றொரு ராஜஸ்தான் மகாராணி தியா குமாரியும் களத்தில் நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பிடிப்புள்ள பஜன் லால் சர்மா, மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வசுந்த ராஜே சிந்தியா அதிர்ச்சியில் உறைந்தார். ராஜஸ்தான் மாநில பாஜக முகமாக இருந்த வசுந்த ராஜே சிந்தியாவின் சகாப்தத்துக்கு பாஜக மேலிடமே முடிவுரை எழுதிவிட்டது.

ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்பு: இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வராக பஜன் லால் சர்மா இன்று பதவியேற்றார். பஜன் லால் சர்மாவுடன் தியா குமாரி, பிரேம்சந்த் பைரவா இருவரும் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அனைவருக்கும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யார் இந்த பஜன் லால் சர்மா?: ராஜஸ்தான் சட்டசபைக்கு முதல் முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருப்பவர் பஜன் லால் சர்மா. Sanganer தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவர். பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றான பரத்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். தற்போது பாஜகவின் ராஜஸ்தான் மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.
மாநில முதல்வர்கள்: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சகா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்கள் வசுந்தர ராஜே சிந்தியா, அசோக் கெலாட், மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், நிதின் கட்காரி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications