For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்பி எடுக்க முயன்ற நிர்வாகி.. கையை தட்டிவிட்டு ஆக்ரோஷம்.. மேடையிலே சீறிய ராகுல்? வெளியான வீடியோ

Google Oneindia Tamil News

காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், கட்சியை பலப்படுத்தும் நோக்கத்திலும் இந்தியா ஒற்றுமை பயணம் என ராகுல் காந்தி ‛பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ அண்ணாமலை! மடியில் கனமில்லை வழியில் பயமில்லை! சேகர் பாபு அட்டாக்! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ அண்ணாமலை! மடியில் கனமில்லை வழியில் பயமில்லை! சேகர் பாபு அட்டாக்!

அரியானாவில் நுழைந்த யாத்திரை

அரியானாவில் நுழைந்த யாத்திரை

இந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது. தற்போது 100 நாட்களை தாண்டிய யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானை கடந்து இன்று அரியானாவில் நுழைந்துள்ளது.

ராஜஸ்தானில் பாதயாத்திரை

ராஜஸ்தானில் பாதயாத்திரை

இந்நிலையில் கடந்த 16 நாட்களாக ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான அதிகார போட்டிக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தலைவர்கள் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை பாசிட்டிவ்வாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.

செல்பிக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

செல்பிக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மேடையில் ராகுல் காந்தி நிற்க அவரை சுற்றி நிர்வாகிகள் சூழ்ந்துள்ளனர். இந்த வேளையில் ஒரு நிர்வாகி ராகுல் காந்தியுடன் சேர்த்து செல்பி எடுக்க முயற்சிக்கிறார். இந்த வேளையில் ராகுல் காந்தி அவரது கையை ஆக்ரோஷமாக தட்டிவிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவிஙல்லை. இருப்பினும் இது ராஜஸ்தானில் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

பாஜகவினர் விமர்சனம்

பாஜகவினர் விமர்சனம்

இந்த வீடியோவை பாஜக தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட பாஜகவின் ஐடி விங்க் தலைவர் அமித் மாளவியா, "பொது இடத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி ராகுல் காந்திக்கு பாடம் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது " என கூறியுள்ளார். இதேபோல் ஆந்திர மாநில பாஜக தலைவர் நாகேத்து ரமேஷ் நாயுடுவும் அந்த வீடியோவை வெளியிட்டு, ‛‛என்ன தவறு நடந்தது? ராகுல் காந்தி ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறீர்கள்?'' என கேட்டுள்ளார்.

English summary
A video has been released on behalf of the BJP in which Rahul Gandhi aggressively slapped the hand of an executive who tried to take a selfie with him on the stage of the Bharat Jodo Yatra public meeting in Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X