வந்தே பாரத் ரயிலை இடைவிடாது பதம் பார்க்கும் மாடுகள்! போபால் ரயில் நிலையத்தில் ஷாக் சம்பவம்!
போபால்: வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தியது முதலே மாடுகள் மோதுவதும் அதன் முன்பகுதி சேதமடைவதும் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி , வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து வருகிறார். இந்த ரயில் சேவை தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் முட்டுவதும் முன்பகுதி சேதமடைதலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர் நிகழ்வாகி வருகிறது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன்-மபி ராணி கமலாபதி வந்தே பாரத் ரயில் சேவையை அண்மையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரயில்சேவை நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலாகும். மொத்தம் 708 கி.மீ தொலைவை 7.45 மணிநேரத்தில் சென்றடையக் கூடியது மபி- டெல்லி வந்தே பாரத் ரயில். அப்போது, ஏப்ரல் 1-ந் தேதி திறக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் சேவை மூலம் நாட்டு மக்களை முட்டாளாக்குகிறாரா? பிரதமர் மோடி எனவும் காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடித்தனர்.

போபாலில் இருந்து புறப்படக் கூடிய 20172 வந்தே பாரத் ரயில் குவாலியரின் தாத்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மாடு ஒன்று ரயில் முன்பகுதியில் டமாரென மோதியது. பின்னர் ரயில் பிளாட்பாரத்திலேயே சுமார் 15 நிமிடங்கள் நின்றது. மாடு அங்கிருந்து நகர்ந்த பின் ரயிலின் முன்பகுதியில் ஏற்பட்ட சேதம் கண்டறியப்பட்டது. ரயிலின் முன்பகுதி சேதம் சரி செய்யப்பட்ட பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications