எல்லையில் பூட்டானும் சேட்டையா? அஸ்ஸாமுக்கான பாசன நீரை நிறுத்தியதா?
குவஹாத்தி: அண்டை நாடான நேபாளத்தைத் தொடர்ந்து பூட்டானும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அஸ்ஸாம் கிராமங்களுக்கான பாசன நீரை பூட்டான் நிறுத்தி இருப்பதாக வெளியான செய்திகளால் சர்ச்சை வெடித்துள்ளது.
Recommended Video
இந்திய பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது நேபாளம். இது தொடர்பான மேப் ஒன்றுக்கும் நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
சீனாவின் தூண்டுதலால்தான் நேபாளம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதனால் நேபாளம் மீது கடும் அதிருப்தியை இந்தியா வெளிப்படுத்தி இருக்கிறது.

பூட்டானும் குடைச்சலா?
இந்நிலையில் இந்தியாவையே பாதுகாப்பு உட்பட அத்தனைக்கும் சார்ந்திருக்கும் பூட்டானும் தொல்லை கொடுக்க தொடங்கி இருக்கிறது. அஸ்ஸாம் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் பாசன வசதி பெறக் கூடிய நீரை பூட்டான் நிறுத்தி இருக்கிறது. 1953-ம் ஆண்டு முதல் இந்த பாசன நீரை இந்திய விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சீனா சார்பு பூட்டான்?
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டதாகவே பூட்டான் தரப்பில் கூறப்படுகிறது என்கிறது ஒரு செய்தி. ஆனாலும் பூட்டானிலும் சீனா சார்பு முழக்கங்கள் அவ்வப்போது எழுவது உண்டு. இதனால் பூட்டானும் சீனாவின் பிடியில் சிக்கிக் கொண்டு இந்தியாவுக்கு குடைச்சல் தருகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பராமரிப்புதான் காரணம்
இதனிடையே இந்தியாவுக்கான பாசன நீரை நிறுத்தவில்லை என விளக்கம் பூட்டான் விளக்கம் தந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாசன கால்வாய்களை பராமரிக்கும் பணி நடைபெற்று வருவதால்தான் நீர் திறந்துவிடவில்லை என்றும் பூட்டான் விளக்கம் அளித்துள்ளது என்கின்றன செய்திகள். இந்திய பகுதிகளுக்கான நீரை ஒருபோதும் நிறுத்த மாட்டோம் என்றும் பூட்டான் கூறியிருக்கிறதாம்.

டோக்லாமும் இந்தியாவும்
ஏற்கனவே பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்ற முயற்சித்தது. டோக்லாமை சீனாவிடம் இருந்து காப்பாற்ற இந்திய வீரர்கள்தான் மல்லுக்கட்டி நின்றனர். இந்திய வீரர்களின் உறுதியான எதிர்ப்பால் பூட்டானின் டோக்லாம் சீனா வசமாகாமல் தடுக்கப்பட்டது என்பது சில ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. இதை மறந்து பூட்டானும் சீனாவுடன் கை கோர்த்தால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிக மோசமான பின்னடைவை சந்திக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர்












Click it and Unblock the Notifications