கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்ப் பயன்படுத்திய டாக்டர்... ஒடிசாவில் பரபரப்பு!
புவனேஸ்வர்: ஒடிஸாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையின் போது, மருத்துவர் சைக்கிள் பம்ப் பயன் படுத்தப்படுத்தியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒடிசாவில் சைக்கிள் பம்ப் உதவியுடன் பெண்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் பனார்பால். அங்குள்ள மருத்துவ மனையில் கடந்த 28-ம் தேதி கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் 56 பெண்களுக்கு கருத் தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மகேஷ் பிரசாத் ராத் என்ற மருத்துவர் பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்தார்.
கருத்தடை முகாம் நடைபெற்ற மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடத்துவதற்கு தேவையான வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, சாதாரண அறையில் வைத்தே பெண்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் மருத்துவர்.
பொதுவாக கருத்தடை அறுவைச் சிகிச்சையின்போது வயிற்றில் கார்பைன் டை ஆக்ஸைடின் அளவு சீராக இருக்க செய்ய ‘இன்சப் லேட்டர்ஸ்' கருவியை மருத்துவர்கள் பயன் படுத்துவது வழக்கம். ஆனால் பனார்பால் மருத்துவமனையில் அந்த வசதி இல்லாததால், மகேஷ் பிரசாத் சைக்கிள் பம்பை இன்சப்லேட்டர்ஸாக பயன்படுத்தியுள்ளார்.
இளைஞர் ஒருவர் சைக்கிள் பம்பில் காற்றடிக்க மகேஷ் பிரசாத் அறுவைச் சிகிச்சையை நடத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அம்மாநில நாளிதழ்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அதைக் கண்டு ஆவேசமடைந்த சமூக ஆர்வலர்களும், பாஜக தொண்டர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர் மகேஷ் பிரசாத் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளேன். கிராமப்புற மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருக்காது. எனவே ‘இன்சப்லேட்டர்ஸ்' கரு விக்குப் பதிலாக சைக்கிள் பம்பை பயன்படுத்துகிறோம், இதில் தவறில்லை' என விளக்கமளித்துள்ளார்.
ஆனால், கருத் தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்பை பயன்படுத்துவது ஆபத்தானது. பம்பின் லூப்ரி கென்ட்ஸ் பெண்களின் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது, அவர்களின் ரத்த நாளங்களில் காற்றுக் குமிழிகள் அடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்கள் வலுவடைந்து வருவதை அடுத்து, இச் சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications