For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானில் திடீர் பரபரப்பு.. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பல்.. உளவா? என்ன நடந்தது?

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பல் விரட்டியடிக்கப்பட்டது

Google Oneindia Tamil News

காந்திநகர்: இந்திய கடல் எல்லைக்குள், பாகிஸ்தான் போர் கப்பல் ஒன்று திடீரென நுழைந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதையடுத்து, அந்த கப்பல் உடனடியாக விரட்டியடிக்கப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தின் கட்ச் பகுதியில் ஹரமி நல்லா கடற்கழி பகுதி அமைந்துள்ளது.. இங்கு எல்லை தாண்டிய அத்துமீறல்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகும்..

அந்தவகையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இப்படி அத்துமீறி நுழைவதை வழக்கமாக கொண்டிருப்பதால், எல்லை பாதுகாப்பு படையினர் இந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 சீன பதற்றத்திற்கு நடுவே.. காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த அமெரிக்க கடற்படை கப்பல்! ஓ இது தான் காரணமா சீன பதற்றத்திற்கு நடுவே.. காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த அமெரிக்க கடற்படை கப்பல்! ஓ இது தான் காரணமா

அத்துமீறல்

அத்துமீறல்

சில மாதங்களுக்கு முன்புகூட பாகிஸ்தான் நாட்டு மீனவர்களின் 9 படகுகள் குஜராத் பகுதி கடலில் சுற்றிக்கொண்டிருந்தது... உடனடியாக இவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்... உடனே படகில் இருந்த பல மீனவர்கள் கடலில் குதித்து தப்பி ஓடிவிட்டனர்... அவர்களில் 2 பேரை மட்டும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் போர்க்கப்பல் நுழைந்துவிட்டது..

எச்சரிக்கை

எச்சரிக்கை

உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய கடற்படையினர் இதை கவனித்துவிட்டு, இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் அளித்தனர்... இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த இந்திய கண்காணிப்பு விமானமானது, பாகிஸ்தான் போர்க்கப்பலின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்ததுடன் அதன் பகுதிக்கு திரும்பும்படி வலியுறுத்தியது... ஆனால், டோர்னியர், ஆலம்கிர் மீது வட்டமிட்டுக் கொண்டே இருந்ததாக கடலோர காவல்படை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விமானம்

விமானம்

பாகிஸ்தான் போர் கப்பல் இப்படி அத்துமீறியதன் நோக்கத்தை அறிய, வானொலி மூலம் இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் கேப்டனுடன் தொடர்பு கொண்டனர்.. ஆனால், அதற்கு அவர் எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லையாம்.. இதையடுத்து டோர்னியர் விமானம் 3 முறை பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு முன்னால் பறந்து பறந்து வார்னிங் தந்து கொண்டே இருந்தது.. இதையடுத்து பின்வாங்கிய ஆலம்கீர், பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பு

பரபரப்பு

அதேபோல, இதே கட்ச் மாவட்டம் ஹாராமி நாலாவில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் கடல் எல்லை பகுதியில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் நாட்டு படகிலிருந்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 12 துப்பாக்கிகளை சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. வழக்கமாக மீனவர்கள், துப்பாக்கிகள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட நிலையில், போர்விமானம் நுழைந்துவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
big conspiracy foiled indian aircraft shoes away pakistans navy ship alamgirஇந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பல் விரட்டியடிக்கப்பட்டது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X