ஹிஜாப்பை பிடித்து இழுத்த முதல்வர் நிதிஷ்.. தடுக்க போன பாஜக துணை முதல்வர்! பீகாரில் திடீர் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக மற்றும் ஜேடியு கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தில் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். அதேநேரம் 74 வயதான நிதிஷ் குமார் உடல்நிலை சரியில்லை எனக் கடந்த சில காலமாகவே பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும், அக்கட்சி இதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

நிதிஷ் குமார் சர்ச்சை
இதற்கிடையே நிதிஷ் குமார் இப்போது இன்னொரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் இஸ்லாமியப் பெண் ஒருவருக்கு அரசுத் திட்டத்தை வழங்கினார். அந்தப் பெண் ஹிஜாப் அணிந்தபடியே முதல்வரிடம் இருந்து ஆவணத்தைப் பெற்றுக் கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ஒரு பெண்ணின் ஹிஜாப்பை நிதிஷ் குமார் இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பரபரப்பு
திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் மருத்துவர் ஒருவருக்கு அவர் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றும்படி சைகை காட்டினார். அந்தப் பெண் ஹிஜாப்பை அகற்றும் முன்பே, நிதிஷ் குமார் ஹிஜாப்பை பிடித்து கீழே இழுத்தார். நிதிஷ் குமார் இப்படிச் செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அருகே துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி இருந்தார். அவர் நிதிஷ்குமாரை தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.நிதிஷ் குமாரின் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் இது மோசமானது என்றும் காங்கிரஸ் கண்டித்துள்ளது. மேலும், நிதிஷ்குமார் உடனடியாகத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.. நிதிஷ்குமார் மனநிலை சரி இல்லை என்பதற்கு ஆதாரம் தான் இந்த சம்பவம் என ஆர்ஜேடி சாடியுள்ளது. ஆர்ஜேடி தனது ட்விட்டரில், "நிதிஷுக்கு என்ன ஆனது? அவரது மனநிலை இப்போது முற்றிலும் பரிதாபகரமான நிலையை எட்டியுள்ளது" என்று விமர்சித்துள்ளது.
ये बिहार के मुख्यमंत्री नीतीश कुमार हैं।
— Congress (@INCIndia) December 15, 2025
इनकी बेशर्मी देखिए- एक महिला डॉक्टर जब अपना नियुक्ति पत्र लेने आई तो नीतीश कुमार ने उनका हिजाब खींच लिया।
बिहार के सबसे बड़े पद पर बैठा हुआ आदमी सरेआम ऐसी नीच हरकत कर रहा है। सोचिए- राज्य में महिलाएं कितनी सुरक्षित होंगी?
नीतीश कुमार… pic.twitter.com/2AO6czZfAA
ஆர்ஜேடி
ஜேடியு- பாஜக கூட்டணி பெண்களைத் துச்சமென நினைக்கிறார்கள் என்பதையே இந்தச் சம்பவம் காட்டுவதாக ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் எஜாஸ் அஹ்மத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "ஒரு முஸ்லிம் பெண்ணின் முகத்தில் இருந்து ஹிஜாப்பை அகற்றியுள்ளனர். பெண்கள் மேம்பாடு என்ற பெயரில் என்ன மாதிரியான அரசியலைச் செய்கிறார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது. நிதிஷின் இந்தச் செயல் மத சுதந்திரத்தை உறுதி செய்யும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்" என்று சாடியுள்ளார்.
காங்கிரஸ்
அதேபோல காங்கிரஸ் கட்சியும் நிதிஷ் குமார் இழிவானது என்று கடுமையாக விமர்சித்தது. காங்கிரஸ் தனது ட்விட்டரில், "அவரது கீழ்த்தரமான செயலைப் பாருங்கள்.. ஒரு பெண் மருத்துவர் நியமனக் கடிதத்தைப் பெற வந்தபோது, நிதிஷ் குமார் அவரது ஹிஜாப்பை இழுத்து அகற்றினார். பீகாரின் முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய இழிவான செயலில் ஈடுபடுகிறார். அப்போது மாநிலத்தில் பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? நிதிஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இதை மன்னிக்கவே முடியாது" என்று பதிவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications