நீட் வினாத்தாள் லீக்.. டார்கெட் வைக்கப்படும் தேஜஸ்வி யாதவ்? பீகார் துணை முதல்வர் குற்றச்சாட்டு
பாட்னா: பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்த முறைகேட்டில் தேஜஸ்வி யாதவின் உதவியாளருக்கு தொடர்பு இருப்பதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தேசிய அளவில் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன. இதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள்தான். அதாவது, தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. 67 தேர்வர்கள், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் யாரும் இப்படி பெற்றதில்லை. ஒரே மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

எனவே நீட் தேர்வுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு பணம் பெற்றுக்கொண்டு நடத்தப்படுகிறது. இதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. சமீபத்திய தேர்வு முடிவுகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளது என்று கூறி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் பீகாரில் நீட் தேர்வின் வினாத்தாள் லீக் ஆகியிருந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதாவது பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு, முன்கூட்டியே வினாத்தாள் லீக்காகி இருக்கிறது. இதற்காக பெரும் தொகை கைமாறி இருக்கிறது என்பதையும் மாணவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தொடர்பு இருக்கிறது என அம்மாநில துணை முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா கூறுகையில், "நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கும் பிரித்தம் குமார் என்பவரும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பிரித்தம் குமாருக்கு பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் தொடர்பு இருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
பிரித்தம் குமார் என்பவர் தேஜஸ்வி யாதவின் உதவியாளர் என்றும் துணை முதல்வர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் தேர்வில் முறைகேடு செய்த மாணவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அளித்துள்ள வாக்குமூலம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
"தேர்வுக்கு முந்தைய நாள் எனது மாமா மூலம் கிடைத்த வினாத்தாளும், தேர்வின் வினாத்தாளும் ஒன்றுதான். எனது மாமா, பீகார் டான்பூர் நகர அவையில் பொறியாளராக பணிபுரியும் சிக்கந்தர் பிரசாத் யாத்வேந்து மூலம் வினாத்தாளை பெற்று கொடுத்தார்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications