வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணி.. ஆதார் அட்டையை ஏற்க மறுக்கும் அதிகாரிகள்! பீகாரில் சலசலப்பு!
பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சிக்கல் என்னவெனில், பாட்னா போன்ற நகரங்களில் ஆதார் அட்டையை அதிகாரிகள் அடையாள சான்றாக அதிகாரிகள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எனவே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட 7.89 கோடி வாக்காளர்களில் 57% (4.5 கோடி) பேர் தங்கள் கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்த 11 வகையான ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த 11 ஆவணங்களில் ஆதார் அட்டை சேர்க்கப்படவில்லை. இருப்பினும் சில இடங்களில் ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பீகாரிலும் பாட்னா போன்ற நகர்புற பகுதிகளில் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு நகல் காண்பிக்கப்பட்டால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
ஆனால் இதே நடைமுறை பீகாரின் கிராமப்புறங்களில் பின்பற்றப்படுவதில்லை. மிக குறிப்பாக 'சீமாஞ்சல்' பகுதியில் ஆதார் அட்டையை அடையாள சான்றாக அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதற்கு மாறாக பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ் அல்லது பட்டா மாதிரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாகுபாடு? கிரம மக்களுக்கும் 'சீமாஞ்சல்' பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டும் ஏன் ஆவணங்களை சரி பார்ப்பதில் இந்த அளவுக்கு பாரபட்சம்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
பீகார் மாநிலத்தின் 'சீமாஞ்சல்' பகுதிதான் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். 'சீமாஞ்சல்' என்பது பூர்ணியா, கட்டிஹார், அராரியா, கிஷன்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளை இது உள்ளடக்கி இருக்கிறது. இந்த பகுதிகள் மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்துடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. சாலை வசதி, போக்குவரத்து, சுகாதார வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை இங்கு அதிகம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது அல்லது திருத்துவது போன்ற அரசு சார்ந்த பணிகளுக்குத் தேவையான சரியான ஆவணங்கள் பல கிராமப்புற மக்களிடம் இல்லை என்பதே தற்போதைய பிரச்சனை.
இஸ்லாமிய மக்கள் அதிகமாக இருப்பதால் மத்திய அரசு இந்த மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து கழற்றிவிட பார்க்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், இங்குள்ள மக்களில் சிலர் வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்களாக இருக்கலாம் என்று பாஜகவின் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications