சிபிஐயை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய லாலு கட்சி அமைச்சர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா : பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், சிபிஐ அமைப்பை நாயுடன் ஒப்பிட்டு பேசிய கருத்து, தேசிய அளவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சந்திரசேகர், லாலு வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை தொடர்பாக சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

Bihar minister’s shocking rant; compares CBI to a dog

அதில் ' காங்கிரஸ் ஆட்சியின் போது சிபிஐ யை அரசு கூண்டுகிளி போல் நடத்துவதாக பாஜக விமர்சித்தது. ஆனால் இப்போது அவர்கள் ஆட்சியில் சிபிஐ அமைப்பு நாயை விட மோசமாக உள்ளது.

பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவை விட அதிகளவில் சொத்து வைத்திருக்கும் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. ஆனால் அவர்களை எல்லாம் நெருங்க முடியாத நிலையில் உள்ளது சிபிஐ.

அதே சமயம் எங்கள் தலைவர் லாலுவின் குடும்பத்தை ஒழித்து கட்டும் அனைத்து அதிகாரங்களும் சிபிஐ. அதிகாரிகளுக்கு உண்டு. பாஜகவின் தூண்டுதல் பெயராலேயே லாலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Is BJP Pulling Kushboo to their party? - Oneindia Tamil

இப்போது தேஜஸ்வியை பதவியில் இருந்து நீக்க நிதிஷ்குமாருக்கும் பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது." என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் பேச்சு பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bihar Minister Chandrashekhar said ' CBI’s condition if worse-off than a dog'.
Please Wait while comments are loading...