"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு!
பாட்னா: இந்தியாவில் இப்படியும் ஒரு மாநிலமா என்று அனைவரும் கேவலமாக பேசும் அளவுக்கு பீகாரில் நிலைமை உள்ளது. சாதாரண பரீட்சையை பெரும் போர்க்களமாக மாற்றி வருகிறார்கள் அங்குள்ள பெற்றோர்கள் சிலர். பிள்ளைகளுக்குப் பிட் கொடுக்க அவர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் தடியடியும், போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடக்கும் அளவுக்கு நிலைமை முற்றியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது 10 மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் நடந்து வருகின்றன. பீகாரிலும் பத்தாவது வகுப்புப் பொதுத் தேர்வு நடந்து வருகிறது. ஆனால் வழக்கம் போல இதில் பெரும் அக்கப்போர் மூண்டுள்ளது.

தேர்வு எழுதும் தங்களது பிள்ளைகளுக்கு உதவியாக பிட் கொடுத்தும், காப்பி அடிக்க உதவியும் பெற்றோர்கள் தேர்வு மையங்களில் குவிந்து வருகிறார்கள். ஜன்னல்களில் தொற்றி நின்றபடி அவர்கள் செய்யும் அட்டகாசம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பெயர் ஒரே நாளில் கெட்டுப் போய் விட்டது.
வைஷாலி மாவட்டம் ஹாஜிப்பூர் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு பிட் கொடுத்து உதவுவதற்காக, அவர்களுக்கு வேண்டியவர்கள் ஏராளமானோர் குவிந்து ஜன்னல் வழியாக தொற்றி ஏறி ஸ்பைடர்மேன் போல காணப்பட்ட காட்சி நாட்டையே உலுக்கி விட்டது. முதலில் இதை போலீஸாரும் சரி, அதிகாரிகளும் சரி கண்டு கொள்ளவில்லை. ஆனால் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பீகார் மாநிலம் மீது நாட்டு மக்கள் முகச் சுளிப்பை வெளிக்காட்டியதைத் தொடர்ந்து தற்போது போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
நேற்றும் இதேபோல நூற்றுக்கணக்கான பெற்றோர் கூடி பிட் தானம் செய்தனர். இதையடுத்து அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் முதலில் கூறினர். ஆனால் அவர்கள் போகவில்லை. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களைப் போலீஸார் கலைந்து செல்லச் செய்தனர்.
இதுபோல், போஜ்பூர் மாவட்ட தலைநகர் ஆராவில் உள்ள ஒரு தேர்வு மையத்திலும், காப்பி அடிக்க உதவுவதற்கு பலர் திரண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications