40 சிறுமிகளை சூறையாடிவிட்டு கைதான போதும் அவமானப்படாமல் அசட்டுத்தனமாக சிரிக்கும் தொழிலதிபர்!
40 சிறுமிகளை சூறையாடிவிட்டு கைதான போதும் சிறிதும் வெட்கமில்லாமல் தொழிலதிபர் சிரிக்கிறார்.
Recommended Video

பாட்னா: பீகாரில் ஒரு குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகளை பலாத்காரம் செய்துவிட்டு கைதான நிலையிலும் சிறிதும் வெட்கமில்லாமல் தொழிலதிபர் சிரிக்கும் காட்சிகளை பார்க்கும் பொதுமக்கள் கடும் கோபத்துக்குள்ளாகியுள்ளனர்.
முசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகம். இது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இங்கு மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தியது.
இங்கு 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், இதை செய்தவர்கள் காப்பக உரிமையாளரும் அந்த காப்பகத்துக்கு நன்கொடை வழங்குபவர்களும் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் காப்பகம் உரிமையாளர் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்றும் பதிவிட்டிருந்தார்.

40-க்கும் மேற்பட்ட சிறுமிகள்
இந்நிலையில் இந்த விவகாரம் மாநிலத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியது. காப்பகத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திடுக் தகவல்களை கூறினார். அதில் இதுவரை இந்த காப்பகத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளை 4 ஆண்டுகளாக பலாத்காரம் செய்துள்ளனர்.

சுற்றுச்சுவர் இடிப்பு
மேலும் பலாத்காரத்தை தட்டி கேட்ட ஒரு பெண்ணை கொலை செய்து இதே வளாகத்தில் புதைத்தும் உள்ளனர் என திடுக் தகவலை தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேசிபி வரவழைத்து காப்பக வளாகத்தை தோண்டினர். மேலும் காப்பகத்தின் சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டது.

காப்பக உரிமையாளர்
இந்த புகார் தொடர்பாக நிதிஷ்குமார் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் (55) உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை போலீஸார் தேடி வருகின்றனர்.

துன்புறுத்தல்
பலாத்கார செயலுக்கு முரண்டு பிடிக்கும் குழந்தைகளை அடித்தும் போதை ஊசிகளை போட்டும் இந்த 10 மிருகங்களும் வேட்டையாடியுள்ளன. அதுவும் ஒரு நாள் இரு நாள் அல்ல, கடந்த 4 ஆண்டுகளாக. இந்த பிரஜேஷ் தாக்குர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் போது சிறிதும் வெட்கமே இல்லாமல் பல்லை காட்டி சிரித்து கொண்டே சென்ற காட்சிகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications