பிறப்பு சான்றிதழ்.. திருமணம் முடிந்ததுமே "தங்கமான" மனைவிக்காக காத்திருந்த மாப்ளை.. நம்பவே முடியலயே
சிம்லா: நீண்ட நாட்களாக பெண் கிடைக்காத நிலையில், சமீபத்தில்தான் இளைஞருக்கு திருமணம் நடந்துள்ளது.. ஆசை ஆசையாக மணவாழ்க்கையை துவங்க காத்திருந்த நிலையில், போலீஸில் புகார் தரும் நிலைமைக்கு வந்துவிட்டார் புதுமாப்பிள்ளை.. என்ன நடந்தது இமாசல பிரதேசத்தில்?
இமாசல பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தில் சகி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேஷ் சர்மா.. இந்த இளைஞருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.. இதனால், புதுமனைவியுடன் தன்னுடைய இல்லற வாழ்வை, பலவிதமான ஆசைகளுடன் துவங்கினார்.

தங்க நகை, பணம்: ஆனால், தாலி கட்டி அடுத்த சில நாட்களிலேயே, மனைவியை காணவில்லையாம்.. அப்போதுதான், வீட்டிலிருந்த பணம் நகையுடன், புதுமனைவி ஓடியிருப்பது தெரியவந்தது. இதனால் உச்சக்கட்ட அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை போலீசில் புகார் தந்திருக்கிறார்.. அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
"திருமணத்துக்கு பெண் தேடி கொண்டிருந்தபோது, பால்தேவ் சர்மா என்ற புரோக்கர் எனக்கு பழக்கமானார்.. அவர் மூலம், பபிதா என்ற பெண் அறிமுகமானார்.. பபிதாவுடன் எனக்கு திருமணம் நிச்சயமானது.. இந்த திருமணத்திற்காக பால்தேவ் ரூ. 1.50 லட்சம் ரூபாய் புரோக்கர் கமிஷன் வாங்கிக் கொண்டார்..
பிறப்பு சான்றிதழ்: இதையடுத்து, கடந்த டிசம்பர் 13-ந்தேதி பபிதாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டேன்.. பெண்ணுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்றார்கள்.. அதனால் என்னால் பதிவு திருமணம் செய்ய முடியவில்லை.. கோவிலிலேயே பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன்.
திருமணம் முடிந்த சில நாட்களில், தன்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, பார்த்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு, பபிதா சென்றார். 2 நாட்களாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.. அதனால், நான் அவருக்கு போன் செய்தேன்.. ஆனால், என்னுடைய போன் அழைப்புகளையும் எடுக்கவில்லை.
புரோக்கர்: என்னுடைய வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்று ஏமாற்றிவிட்டார். உடனே புரோக்கருக்கு போன் செய்தேன்.. புரோக்கர் பால்தேவ் சர்மாவும் என்னுடைய அழைப்புகளை ஏற்க மறுக்கிறார். எனவே என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஜிதேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.. இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
