முசோலினியின் கொள்கை! ராமர், அனுமனை வெறியர்களாக பாஜக - ஆர்.எஸ்.எஸ். காட்டுகிறது - சத்தீஸ்கர் முதல்வர்
ராய்ப்பூர்: மென்மையான, கனிவான குணம் படைத்த ராமரை வெறிகொண்டவராகவும் அனுமனை கோபத்தின் சின்னமாவும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காட்டுவதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, "அதி தீவிர தேசியவாதத்தின் தன்மையை இந்தியா கடந்து வந்துகொண்டிருக்கிறது.
ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் மத மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தரப்படுவது இல்லை. இந்த நிலை விரைவில் கடந்து செல்லும். மீண்டும் காங்கிரஸ் எழுச்சி பெறும்.

பல வடிவங்களில் ராமர்
ராமர் நமது கலாச்சாரத்தோடு ஒன்றியவர். பல்வேறு தருணங்களில் பல்வேறு வகையான ராமரை நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். கபீரின் ராம், துளசியின் ராம், ஷபாரியின் ராமரை நாம் அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும், அறிவிலும் ராமர் வாழ்கிறார். தொழிலாளர்கள் ராமரை ஒரு வடிவில் பார்க்கிறார்கள்.

காந்தியும் ராமரும்
விவசாயிகள் ராமரை வேறு வடிவில் பார்க்கிறார். பழங்குடியின மக்கள் அவரை மற்றொரு வடிவில் பார்க்கின்றனர். பக்தர்களும் சிந்தனையாளர்களும் ராமரை புதியதொரு வடிவில் பார்த்து வருகிறார்கள். மகாத்மா காந்தியும் ராமரை ஒரு வடிவில் பார்த்தார். அவரது கடைசி வார்த்தைகள் 'ஹே ராம்'. அவர் எப்போதும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்று சொல்லி வந்தவர்.

ராமரை மாற்றும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக
ஆனால் இன்றோ, மிகவும் கண்ணியமான மனிதராக, அன்பின் அடையாளமாக ஒவ்வொரு பக்தரின் உள்ளத்திலும் குடியிருந்த ராமரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவும் பார்க்கும் விதமும் அவர்கள் அதை வைத்து நிறுவும் கொள்கையும் மோசமானது. ராமரை சண்டைக்காரராக அவர்கள் காட்டுகிறார்கள். ராமரை வெறிகொண்டவராக நிறுவுகிறார்கள்.

அனுமனையும் மாற்றுகிறார்கள்
அதேபோல் அனுமனை எடுத்துக்கொண்டால் அவர் பணிவு, பக்தி, அறிவின் உருவகமாக பார்க்கப்பட்டு வந்தார். அனுமனின் பழைய படங்கள் மிகவும் அழகாக இருக்கும். ஆனால், தற்போது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அனுமனை கோபக்காரராக அடையாளப்படுத்துகின்றன. அதற்கு ஏற்றார்போல் போஸ்டர்களை வெளியிடுகிறார்கள். சமூகத்தின் சிந்தனையை கட்டமைக்கிறார்கள்.

முசோலினி தெரியுமா?
அன்று ராமரை வைத்து செய்ததை தற்போது அனுமனை வைத்து செய்கிறார்கள். பாஜகவின் தேசியவாத கொள்கை இறக்குமதி செய்யப்பட்டது. முசோலினியை பார்த்துள்ளீர்களா? அவரின் தொப்பி, மேளம் என அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டது. அவர்களின் தேசியவாத கொள்கையில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் இருக்காது. நமது தேசியவாத கொள்கை என்பது வேறு." என்றார்.
-
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications