மதவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பும், மத்திய அரசின் வாக்கு வங்கி அரசியலும்!
டெல்லி: நாட்டையே உலுக்கி போட்டுள்ளது மத்திய அரசு வெளியிட்டுள்ள 2011ம் ஆண்டுக்கான மதவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம்.
இந்தியாவில் 1872 ஆண்டு முதலே மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டன. பத்தாண்டுகளுக்கு ஒருமு்றை இந்த கணக்கெடுப்புகள் நடக்கின்றன. ஆனால், எந்த கணக்கெடுப்பின்போதும் ஏற்படாத அதிர்வலைகள் 2001-11ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பால் ஏற்பட்டுள்ளது.
இந்த அதிர்வுக்கு காரணம், இது வெறுமனே, சமூக, பொருளாதார, எழுத்தறிவு சார்ந்த கணக்கெடுப்பாக இல்லாமல், மனிதர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் மதம் சார்ந்த கணக்கெடுப்பாகவும் அமைந்துவிட்டதுதான்.

முதல்முறை
மதம் மற்றும் சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமாக நடத்தப்படாமல் இருந்த நிலை மாறி 2001ல் மதம் மற்றும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் விவரம் வெளியான 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய அரசால் அத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்துக்கள்
இந்திய மக்கள் தொகையான 121.09 கோடி பேரில் இந்துக்கள் எண்ணிக்கை 96.63 கோடி என்கிறது இந்த புள்ளி விவரம். இது மொத்த மக்கள் தொகையில், 79.8 சதவீதம். முதல்முறையாக இந்தியாவில் முதல் முறையாக இந்துக்கள் எண்ணிக்கை 80 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது என்பதே இப்புள்ளி விவரத்தின் மையக்கருத்து.

இஸ்லாமியர்கள்
24.6 கோடி மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 14.2 சதவீத பங்குவகிக்கிறார்கள். 2001 முதல் 2011க்கு இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமிய மக்கள் தொகை பெருக்கம் 0.8 சதவீதமாக உள்ளது. ஆனால், அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இது 1.73 சதவீதமாக இருந்தது. எனவே, மக்கள் தொகை அதிகரித்திருந்தாலும், அதன் வேகம் குறைந்துள்ளது.

இஸ்லாமியர்கள் வளர்ச்சி
முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி என்பது 24.6 சதவீதமாக உள்ளது. இது நாட்டில் வேறு எந்த மத மக்கள் தொகையையும் விட அதிகமாகும். இந்துக்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.8 சதவீதமாக உள்ள நிலையில், கிறிஸ்தவர்கள் வளர்ச்சி விகிதம், 15.5 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரி 17.7 சதவீதமாகும்.

தேசிய விகிதத்தைவிட
இதில்தான் விவகாரமே உள்ளது. தேசிய மக்கள் தொகை வளர்ச்சி விகிதமான 17.7 சதவீதத்தை ஒப்பிட்டால் இஸ்லாமியர்கள் மக்கள்தொகை பெருக்கம் (24.6%) அதிகமாக இருப்பதை இந்த புள்ளி விவரம் பட்டவர்த்தனமாக கூறுகிறது. இது பெரும்பான்மையாக வசிக்கும் இந்துக்கள் மத்தியில் அச்ச விதைகளை தூவுவதற்கு வழி ஏற்படுத்திவிட்டது.

பதற்றம்
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுவிடுமோ என்ற அச்சம், சில இந்து ஆதரவு அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ளது அவர்கள் பேச்சுகளில் இருந்து தெரிகிறது. எனவே, மதரீதியான கணக்கெடுப்பு ஒரு பதற்றத்தை இரு சமூகங்கள் இடையே உருவாக்கவே பயன்பட்டுள்ளது.

பயனற்ற தகவல்கள்
குறிப்பிட்ட மதப்பிரிவினரின் கல்வி, பொருளாதாரம் எப்படி உள்ளது என்பது போன்ற கூறுகளோடு புள்ளி விவரம் வெளிவந்திருந்தால், வீழ்ந்துகிடப்போரை தூக்கிவிட அது பயன்படும். ஆனால் வெறுமனே தலை எண்ணிக்கையை வைத்துக்கொண்டு எந்த சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. மாறாக முஸ்லிம்களை காண்பித்து, இந்துக்களை பயமுறுத்தி வாக்குகளை பெற வேண்டுமானால் இந்துத்துவா ஆதரவு கட்சிகளுக்கு பயன் கிடைக்கும்.

இஸ்லாமியருக்கு எதிரான பிரசாரம்
குடும்ப கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்., இதன்மூலம், நாட்டு நலனைவிட மத அடிப்படைவாதிகள் சொல்வதைத்தான் இஸ்லாமியர்கள் கேட்டு நடக்கிறார்கள் என்ற தோற்றம் இம்மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மதமாற்றங்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது கணக்கெடுப்பின் மற்றொரு உபரி தோற்றம்.

எழுத்தறிவு தேவை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் இதுகுறித்து கூறுகையில், "இஸ்லாமிய பெண்கள் மத்தியில் எழுத்தறிவு இல்லாததுதான் மக்கள் தொகை பெருக காரணம். கேரளாவில் இஸ்லாமிய மக்கள் தொகை பெருக்கம், உ.பி, பீகார் போன்ற எழுத்தறிவு குறைந்த மாநில இந்துக்கள் மக்கள் தொகை பெருக்கத்தைவிட குறைவாக உள்ளதை கவனிக்க வேண்டும். பெண்களும் வேலைக்கு போனால் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று வளர்ப்பதே கஷ்டமாகிவிடும். எனவே பெண் கல்விதான் இதற்கு தீர்வாகும்" என்கிறார்.

குழந்தை பிறப்பை தள்ளிபோடலாம்
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அப்துல் சமத் கூறுகையில், "முழுவதுமாக கருத்தடை செய்துகொள்வதைத்தான் இஸ்லாம் மறுக்கிறது. தற்காலிக தீர்வுகளை அது தடை செய்யவில்லை. எனவேதான் ஒரு குழந்தை, இரு குழந்தைகள் போதும் என்ற நிலை தென் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது" என்றார். பேராசிரியர் பெர்னார் டி.சாமி கூறுகையில், "அமெரிக்கா போன்ற நாடுகளில் மதரீதியாக கணக்கெடுப்பு நடைபெறுவதில்லை. அது தேவையற்றது" என்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு எங்கே?
மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வெளியிட்டதன் பின்னணியில், மத்திய அரசின் நோக்கம் என்ன என்பது எளிதாக புரியும்படிதான் உள்ளது. இந்துக்கள் மக்கள்தொகை பெருக்கம் 0.7 சதவீதம் குறைந்துவிட்டது. இஸ்லாமியர்கள் மக்கள்தொகை பெருக்கம் 0.8 சதவீதம் கூடியுள்ளது. இந்த இரு பாயிண்டுகளும்தான் ஆட்சியாளர்களுக்கு தற்போதைக்கு தேவைப்படும் கருப்பொருள். ஏனெனில், மக்கள்தொகை கணக்கெடுப்போடு சேர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சாதிவாரி விவரத்தை வெளியிட முடியாது, அது சாதி சண்டைகளை ஏற்படுத்தும் என்று இதே அரசுதான் கூறியது. ஆனால் மதவாரி கணக்கெடுப்பு மட்டும் ஏன் அவசியப்பட்டது?
-
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி












Click it and Unblock the Notifications