பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.. சந்திரபாபு நாயுடு அதிரடி
உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என அருண்ஜெட்லி கூறியது தவறானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கிறார்.
ஹைதராபாத்: உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என அருண்ஜெட்லி கூறியது தவறானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கிறார். மேலும் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது.

சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கூட்டணியில் இருந்தும் இன்று தெலுங்குதேசம் வெளியேறி இருக்கிறது. இதைப்பற்றி பேசிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ஆந்திர மக்களின் உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என்று கூறினார்.
இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அதில் ''உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என அருண்ஜெட்லி கூறியது தவறானது. உணர்வுகளுக்காகத்தானே தெலுங்கானா பிரிக்கப்பட்டது. பொது மக்களின் உணர்வுகள் வலிமைமிக்கது.'' என்றுள்ளார்.
மேலும் ''சிறப்பு அந்தஸ்து பற்றிய அருண்ஜெட்லியின் அறிக்கை பொறுப்பற்றது. மாநில பிரிவின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications