மேகாலயாவில் இம்முறையும் மண்ணை கவ்வுகிறது பாஜக!
மேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
Recommended Video

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

தடுமாறும் பாஜக
அடுத்தபடியாக நாகா மக்கள் கட்சி 15 இடங்களில் லீடிங்கில் உள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக மேகாலயாவில் வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

10 ஆண்டுகளாக காங்.
மேகாலயாவில் பாஜக இதுவரை தனியாகவோ அல்லது கூட்டணியிலோ ஒரு முறை கூட ஆட்சி அமைத்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளாக மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

2 தொகுதிகளில் போட்டி
மேகாலயா முதல்வராக முகுல் சங்மா உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சோங்ஸ்க் மற்றும் அம்பத்தி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

என்பிபி லீடிங்
இதில் சோங்ஸ்க் தொகுதியில் மட்டும் முதல்வர் சங்மா முன்னிலையில் உள்ளார். மேகாலயாவில் காங்கிரஸ்க்கு அடுத்த படியாக என்பிபி 11 இடங்களில் லீடிங்கில் உள்ளது.

மணிப்பூரில் கூட்டணி
மத்தியில் பாஜகவுடன் என்பிபி கூட்டணியில் உள்ளது. இதேபோல் மணிப்பூர் மாநிலத்திலும் பாஜக என்பிபி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

தனித்து களம் காண்கின்றன
ஆனால் மேகாலயாவில் என்பிபியும் பாஜகவும் தனித்து களம் காண்கின்றன. மேகலாயாவில் காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.

கனவு தகர்கிறது?
பாஜக 47 இடங்களிலும் என்பிபி 52 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. இந்நிலையில் பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன்மூலம் மேகாலயாவில் ஆட்சியமைக்கலாம் என்ற பாஜகவின் கனவு இம்முறையும் தகர்ந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications