திரிபுராவில் ஒன்று அல்ல..நான்கு எதிரிகளை போராடி ஜெயிக்க வேண்டிய வாழ்வா சாவா நிலைமையில் பாஜக!
அகர்தலா: திரிபுராவில் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பாஜக தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அத்தனை எளிதாக வெல்ல முடியாது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. திரிபுராவில் திரும்பிய திசையெங்கும் பாஜக எதிர்ப்பு கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.
திரிபுரா மாநிலம் இடதுசாரிகளின் மேற்கு வங்கம், கேரளா போல ஒரு செங்கோட்டையாக இருந்தது. திரிபுராவில் 25 ஆண்டுகள், இடதுசாரிகளின் ஆட்சியே தொடர்ந்து நீடித்தது. 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த உடன் பல மாநிலங்களில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கபளீகரம் செய்யப்பட்டன. அதில் திரிபுராவும் ஒன்று.

திரிபுரா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இடதுசாரிகள்; எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்தன; இதர மாநில கட்சிகளும் இருந்தன. தமிழ்நாட்டில் அதிமுக- திமுக- பிற கட்சிகள் என்கிற நிலைமைதான் திரிபுராவிலும் இருந்தது. 2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த வேகத்தில் திரிபுராவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை அப்படியே தன்னுள் கரைத்துக் கொண்டது பாஜக. 2108 திரிபுரா தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில் பெரும்பாலனவர்கள் மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். 25 ஆண்டுகால இடதுசாரிகளின் தொடர் ஆட்சி, திடீரென பிரவேசித்த பாஜக இதனால் 2018 தேர்தல் களம் மாறியது. பாஜக வெற்றியை அறுவடை செய்தது. கால் நூற்றாண்டுகால இடதுசாரிகள் எதிர்க்கட்சியாகினர். காங்கிரஸ் காணாமலேயே போனது.
இந்த 5 ஆண்டுகளில் நிலைமை அத்தனையும் தலைகீழாகிப் போய்விட்டது. பாஜகவுக்குள் ஏகப்பட்ட உட்கட்சி குழப்பம். டெல்லி அடிக்கடி தலையிட்டு உட்கட்சி பிரச்சனைகளைப் பேசி தீர்க்க வேண்டிய கட்டாயம். எத்தனை எம்.எல்.ஏ.க்கள் மொத்தமாக கட்சியை விட்டு ஓடுவார்களோ என டெல்லியை அச்சப்பட வைத்தது திரிபுரா பாஜக. இப்போது தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கடந்த காலங்களில் பிரதான எதிரிகளாக இருந்த காங்கிரஸும் இடதுசாரிகளும் கை கோர்த்து நிற்கின்றனர். இது நிச்சயம் தற்போதைய தேர்தலில் பாஜகவுக்கு கடினமான ஒன்றாக இருக்கும்.

இதனையடுத்து புதியதாக உருவாகி உள்ள திப்ரா மோதா. கிரேட்டர் திப்ரலாந்த் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்துகிறது திப்ரா மோதா. அதாவது திரிபுரா மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து கிரேட்டர் திப்ரலாந்த் தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறது இந்த அமைப்பு. தற்போதைய நிலையில் திப்ரா மோதாதான் திரிபுரா தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. திப்ரா மோதாவின் தலைவர் தேப் பர்மா, மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர். திப்ரா மோதாவுடன் மற்றொரு மாநில கட்சியான ஐபிஎப்டி கை கோர்க்க தயாராகவே இருக்கிறது.
திரிபுரா மக்களுக்கான தனி மாநில கோரிக்கையை முன்வைத்து களமிறங்கியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நிற்கிறது. இத்தனை கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாஜக வெல்லத்தான் வேண்டும் என்கிற வாழ்வா சாவா நிலையில் போராடிக் கொண்டிருக்கிறது.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் தேதி: பிப்ரவரி 16; வாக்குப் பதிவு எண்ணிக்கை மார்ச் 2.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications