மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்: கருத்து கணிப்புகள்
மும்பை/ சண்டிகர்: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்களில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக மகாராஷ்டிரத்தில் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்திருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வியடையும் என்றும், சிவசேனை 2-ஆவது மிகப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கும் 90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. ஹரியானாவில் முதல் முறையாக 76% வாக்குகளும் மகாராஷ்டிராவில் 64% வாக்குகளும் பதிவாகின.
இதன் பின்னர் ஏபிபி, சாணக்யா, இந்தியா டிவி, இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.

ஏபிபி - பாஜகவுக்கு 144
ஏபிபி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு தேவையான 144 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது பெரிய கட்சி சிவசேனா
அதேபோல் சிவசேனா 77 இடங்களுடன் 2 வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்கிறது ஏபிபி கருத்து கணிப்பு.

காங்கிரஸ்- தேசியவாத காங். படுதோல்வி
மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்குமாம். காங்கிரஸுக்கு 30 இடங்களும் தேசியவாத காங்கிரஸுக்கு 29 இடங்கள்தான் கிடைக்குமாம். மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா 3 இடங்களில்தான் வெல்லுமாம்.

இந்தியா டிவி
இந்தியா டிவி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 138, சிவசேனா- 59, காங்கிரஸ்- 41, தேசியவாத காங்கிரஸ் 30, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா -12 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது.

இந்தியா டுடே
ஆனால் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 124 இடங்கள்தான் கிடைக்குமாம். சிவசேனாவுக்கு 71, காங்கிரஸ்- 35, தேசியவாத காங்கிரஸ்- 29, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுக்கு 7 இடங்கள் கிடைக்குமாம்.

சாணக்யா
சாணக்யாவின் கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 151, சிவசேனாவுக்கு 71, காங்கிரஸ்- 27; தேசியவாத காங்கிரஸ்- 28, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா 11 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில்..
ஹரியானா மாநிலத்தில் ஏபிபி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக 54, இந்திய தேசிய லோக் தள்- 22, காங்கிரஸ் 10 இடங்களைக் கைப்பற்றுமாம்.

இந்தியா டிவி
இந்தியா டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக- 45, இந்திய தேசிய லோக் தள்-23, காங்கிரஸ் 15 இடங்களை கைப்பற்றும். மற்றொரு மாநில கட்சியான ஹெச்.ஜே.சி. 1 முதல் 7 இடங்களைக் கைப்பற்றக் கூடுமாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications