டிவி செட் டாப் பாக்ஸ்களில் சிப் பொருத்தும் மத்திய அரசு.. மக்களை கண்காணிக்க புதிய திட்டம்!
பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுக்க டிவி செட் டாப் பாக்ஸ்களில் சிப் வைக்க முடிவெடுத்து இருக்கிறது.
டெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுக்க டிவி செட் டாப் பாக்ஸ்களில் சிப் வைக்க முடிவெடுத்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளிப்படையாக கேபிள் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலமாக, இந்த திட்டம் அமல்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 4 தனியார் நிறுவனங்களிடம் செய்யப்பட இருக்கிறது.
இந்த தனியார் நிறுவனங்கள்தான், மக்களின் விவரங்களை சேகரித்து அரசிடம் கொடுக்கும். இதற்கு பல தரப்பில் இருந்தும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

டிஆர்பி கிடையாது
பொதுவாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டிவி சேனல்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள், என்ன நிகழ்ச்சிகள் பார்க்கிறார்கள், எந்த சேனல் பிரபலமாகி இருக்கிறது என்பதை குறிக்கும் டிஆர்பி ரேட்டிங்கை ஒரே மாதிரியாகத்தான் கணக்கிடுகிறார்கள். குறிப்பிட்ட சில வீடுகளில் அவர்ககளின் அனுமதியடன் செட் டாப் பாக்ஸ் பொறுத்தி இதை கணக்கிடுவார்கள். பணக்கார , ஏழை என எல்லா விதமான வீடுகளிலும் இப்படி செய்வார்கள்.

அரசு
ஆனால் அரசு செய்ய இருப்பது டிஆர்பி போன்றது கிடையாது. மத்திய அரசு தற்போது இந்தியாவில் டீவி பயன்படுத்தும் எல்லா வீடுகளிலும் சிப் வைக்கப்பட உள்ளது. இந்தியா முழுக்க, கேபிள் உரிமையாளர்கள் வீடுகளுக்கு செட் ஆப் பாக்ஸ் வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கிறது. இந்த செட் டாப் பாக்ஸ்களில் சிறிய சிப் ஒன்று பொறுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம்தான் மத்திய அரசு நம்மை கண்காணிக்கும்.

வேறுபாடு கிடையாது
இதை வைத்து மத்திய அரசு நாம் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், எதை விரும்புகிறோம் என்று தெரிந்துகொள்ளும். அதற்கு ஏற்றது போல அரசு தங்களை நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் மூலம் நம்முடைய பெரும்பாலான தகவல்கள் அரசிடம் இருக்கிறது. இப்போது, நம்முடைய தனிப்பட்ட விருப்பங்கள் மூலம் இன்னும் நம்மை பற்றிய அதிக தகவல்களை தெரிந்துகொள்ள உள்ளது.

எல்லோரும் எதிர்ப்பு
இதற்கு பெரிய எதிர்ப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு மறைமுகமாக வெளியிடாமல் வெளிப்படையாகவே வெளியிட்டு இருக்கிறது. இதற்கு சில செய்தி சேனல்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தற்போது மத்திய அரசு டிராய் அமைப்பிடம் இதற்கு அனுமதி கோரியுள்ளது. இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications