‛‛தீர்க்கத்தரிசி’’.. நிதிஷ் குமாரை வைத்து பாஜகவின் மெகாபிளான்.. முன்பே அலர்ட்டான மம்தா! பரபர தகவல்
கொல்கத்தா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்பதை முன்கூட்டியே மம்தா பானர்ஜி தெரிந்து வைத்து அலர்ட்டாகி சாமர்த்தியமாக செயல்பட்ட விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த தேர்தல் நடக்கலாம். 2014, 2019ல் வெற்றி பெற்றது போல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெல்லும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால் பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது. வரும் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கின.

இந்த கூட்டணியில் காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, முதல்வர் ஸ்டாலினின் திமுக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்பட 28 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் தான் தற்போது ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சி பாகுபாடுகளை கடந்து எதிர்க்கட்சிகள் இணைந்ததை பார்த்து ஷாக்கான பாஜக தற்போதைய குழப்பத்தால் நிம்மதி அடைந்துள்ளது. குறிப்பாக ‛இந்தியா' கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளார். மேலும் பீகாரில் லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறிக்கும் அவர் மீண்டும் பாஜகவுடன் இணைந்து ஆட்சியை பிடித்து முதல்வராக திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் நிதிஷ் குமாரை வைத்து பாஜக போட்ட பிளான் தனக்கு முன்கூட்டியே தெரியும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதாவது குடியரசு தினத்தையொட்டி நேற்று மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் தேநீர் விருந்து வழங்கினார். இதில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதேபோல் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அப்போது டீ பார்ட்டி நடந்த இடத்தில் அனைவரின் பேச்சு என்பது பீகார் அரசியல் நிலவரம் குறித்தும், நிதிஷ் குமாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றியதாகவும் தான் இருந்தது. இந்த வேளையில் மம்தா பானர்ஜி தனதுக்கு நெருக்கமானவர்களிடம் முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அப்போது தான் அவர் நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைவார் என்பது பற்றி தான் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கூறுகையில, ‛‛இந்தியா' கூட்டணியில் நிதிஷ் குமார் மீது மம்தா பானர்ஜிக்கு தொடக்கம் முதலே சந்தேகம் இருந்தது. ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் நியமனம் செய்யப்பட்ட பிறகு அவரை பாஜகவில் இணைக்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. இதனை முன்கூட்டியே மம்தா பானர்ஜி அறிந்தார். அதோடு நிதிஷ் குமாரை ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு நியமனம் செய்ய மம்தா பானர்ஜி எதிர்த்தார்.
மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு மூலம் நிதிஷ் குமார் ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்தை அப்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். அதன்படி தற்போது நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளார்'' என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications