தமிழை தமிழக எல்லையைத் தாண்டி கொண்டு சென்ற ஒரே கட்சி பாஜகதான்- பொன். ராதா
டெல்லி: தமிழ்நாட்டில், தமிழ், தமிழர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தியவர்களும், கட்சி நடத்துபவர்களும் இதுவரை, தமிழ் மொழியை, தமிழக எல்லையை தாண்டி, கொண்டு சென்றதில்லை. ஆனால், பா.ஜ.க அரசு தான் இந்த காரியத்தை செய்திருக்கிறது. முதல் முறையாக, நாட்டிலேயே தமிழ் புலவர் திருவள்ளுவருக்கு தான் இந்த சிறப்பு கிடைத்திருக்கிறது என்று மத்திய இணை அமை்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

டெல்லியில், நேற்று மத்திய கப்பல் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., டெல்லி தமிழ் சங்கம் மற்றும் பிற தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சாஸ்திரி பவனில் உள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
உலகப் பொதுமறையான திருக்குறளை வழங்கிய, திருவள்ளுவருக்கு பா.ஜ.க அரசு மிகப்பெரிய சிறப்பு செய்திருக்கிறது. அதற்கு காரணமாக இருந்ததற்காக, தமிழக பா.ஜ.க சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஸ்மிருதியிடம், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிகச் சிறந்த கவுரவத்தை, திருவள்ளுவருக்கு, மோடி அரசு வழங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், திருக்குறளை, ஆங்கிலம், இந்தியில் மொழிபெயர்த்து, புத்தகமாக வழங்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
பள்ளிகளில் திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பாரதியார் பாடல்களை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்.
தமிழ்நாட்டில், தமிழ், தமிழர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தியவர்களும், கட்சி நடத்துபவர்களும் இதுவரை, தமிழ் மொழியை, தமிழக எல்லையை தாண்டி, கொண்டு சென்றதில்லை. ஆனால், பா.ஜ.க அரசு தான் இந்த காரியத்தை செய்திருக்கிறது. முதல் முறையாக, நாட்டிலேயே தமிழ் புலவர் திருவள்ளுவருக்கு தான் இந்த சிறப்பு கிடைத்திருக்கிறது. மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு உரிய சிறப்பு செய்யவும் முன்வந்திருக்கிறது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications