மணிப்பூரில் 10,000 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் குவிப்பு- கொந்தளிக்கும் மக்கள்- பாஜகவும் எதிர்ப்பு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த 10,000 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரை உடனே விலக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநில பாஜக தலைவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தி குக்கி, நாகா மற்றும் மைத்தேயி இனமக்கள் குறிப்பிடத்தக்குந்த எண்ணிக்கையில் உள்ளனர். குக்கி, நாகா இன மக்கள் பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர். இதே பட்டியலில் மைத்தேயி மக்களை சேர்க்கும் மாநில பாஜக அரசின் முயற்சிக்கு எதிராக குக்கி இனமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இப்போது வன்முறையாகவும் ஆயுதப் போராட்டமாகவும் திசைமாறிக் கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் வன்முறைகளில் தற்போதுவரை 100 பேர் பலியாகிவிட்டனர். 30,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் குக்கி ஆயுதக் குழுவினரோ, பாதுகாப்பு படையினரை தாக்கி அவர்களிடம் இருந்து நவீனரக ஆயுதங்களை கைப்பற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் அமைதியை நிலைநாட்டுவதில் முன்னேற்றம் காணவில்லை என்கிற அதிருப்தியும் மணிப்பூரில் நிலவுகிறது.
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே ஆயுதப் படை சிறப்பு சட்டத்தின் மூலம் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் மக்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இதனாலேயே மணிப்பூர் பெண்கள், உலகை உலுக்கிய எங்களையும் பலாத்காரம் செய் என்கிற நிர்வாணப் போராட்டத்தை நடத்தி இருந்தனர். இதனால் எப்போதும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் மீது வடகிழக்கு மாநில மக்களுக்கு அதிருப்தியும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இப்பின்னணியில் தற்போது 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டிருப்பதை அம்மக்கள் ஏற்க மறுக்கின்றனர். அப்படையினரை உடனே மணிப்பூரில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினர்.
இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது மணிப்பூர் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர். மணிப்பூர் மாநில பாஜக தலைவர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். பிரதமர் மோடிக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications