இந்து பெண்கள் 5 குழந்தைகள் பெற வேண்டும்: பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
கொல்கத்தா: இந்து பெண்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஷியாமல் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிர்பம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஷியாமல் கோஸ்வாமி. அவர் திங்கட்கிழமை பிர்பம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
இந்து மதத்தைச் சேர்ந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ளாவிட்டால் வருங்காலத்தில் இந்தியாவில் இந்துக்களே இருக்க மாட்டார்கள். இந்துத்துவத்தையும், சனதன் தர்மாவையும் பாதுகாக்க அனைத்து இந்து பெண்களும் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், இந்து பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒரு குழந்தையை ராணுவத்திற்கும், ஒரு குழந்தையை மத குருக்களான எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் தான் ஷியாமல் கோஸ்வாமியும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications