For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழக்கம் போல் பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வர பாஜக தகிடுதத்தம்... காங். எம்எல்ஏக்களிடம் பேரம்

கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு பாஜக ஆட்சி வந்ததை போல் கர்நாடகத்திலும் அதற்கான வேலைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    வழக்கம் போல் பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வர பாஜக தகிடுதத்தம்- வீடியோ

    பெங்களூர்: கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகளை வளைத்து போட்டு பாஜக ஆட்சி அமைப்பது போல் கர்நாடகத்திலும் மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பேரத்தில் ஈடுபட்டுள்ளது.

    கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. மொத்தம் 222 தொகுதிகளில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜேடிஎஸ் 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகத்தில் தனிபெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை.

    ஆரம்பத்தில் பாஜக தனிபெரும்பான்மையுடன் முன்னிலை வகித்த போதிலும் பின்னர் பாஜகவே அதிர்ச்சி அடையும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் மாறி போனது.

    குமாரசாமி முதல்வர்

    குமாரசாமி முதல்வர்

    கர்நாடகத்தில் தனிபெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை என்பதை அறிந்த சோனியாகாந்தி உடனடியாக ஜேடிஎஸ் கட்சியின் தேவ கௌடாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறும் குமாரசாமிதான் முதல்வர் என்றும் சோனியா தெரிவித்தார்.

    ஜேடிஎஸ் ஏற்பு

    ஜேடிஎஸ் ஏற்பு

    இதை தேவ கௌடா ஏற்றுக் கொண்டார். இதையடுத்து குமாரசாமி, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கையெழுத்து கடிதத்துடன் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் பாஜகவுக்கு தனிபெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர்.

    எடியூரப்பா கண்டனம்

    எடியூரப்பா கண்டனம்

    இந்நிலையில் காங்கிரஸ் ஜேடிஎஸ்ஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தோடு பின்வாசல் வழியாக அரசியலுக்கு வருகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக பயன்படுத்திய ஆயுதத்தை தற்போது சமயோஜிதமாக காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் எம்எல்ஏக்கு வலை

    கர்நாடக சட்டசபையில் தனிபெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு இன்னும் 4 எம்எல்ஏக்கள் கிடைத்தால் போதுமானது. எனவே குஷ்டகி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ அமரேகௌடா லிங்கனா கௌடா பய்யாபூரை பாஜக தொடர்பு கொண்டு டீல் பேசியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு பாஜக தலைவர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. அமைச்சர் பதவி தருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் நான் அங்கு செல்லமாட்டேன். குமாரசாமிதான் எங்களது முதல்வர் என்றார்.

    English summary
    Congress MLA Amaregouda Linganagouda Patil Bayyapur says I got a call from the BJP leaders. They said come to us & we'll give a ministry to you. We'll make you a minister. But, I'm going to stay here. HD Kumaraswamy is our Chief Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X