ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ்கான் (Hormozgan) மாகாணத்தின் சிரிக் தீவில் (Sirik Island) உள்ள தொலைத்தொடர்பு டவர் (Telecoms Tower) ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் சமீபத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியிருந்தது.
இந்த தாக்குதல் நடவடிக்கை நடந்த அடுத்த ஒரு மணிநேரத்தில், பழிவாங்கும் விதமாக, அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்திய முக்கிய விமானப்படைத் தளம் (Airbase) மீது ஏவுகணைகள் மற்றும் போர்விமானங்கள் மூலம் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1 மணிநேரத்தில் அதிரடி தாக்குதல்
ஈரானின் பார்ஸ் (Fars) செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, அமெரிக்க ராணுவத்தின் இந்தத் திடீர் தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் ஐஆர்ஜிசி (IRGC) அமைப்பின் விண்வெளி வான்படைப் பிரிவு (Aerospace Force) உடனடியாகக் களம் இறங்கியுள்ளது.
டெலிகாம் டவர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு எந்த விமானப்படைத் தளத்தைப் பயன்படுத்தியதோ, அதே தளத்தை இலக்காகக் கொண்டு ஈரானிய போர்விமானங்கள் தங்களின் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் தாங்கள் திட்டமிட்டிருந்த இலக்குகள் அனைத்தும் (Predicted targets) முழுமையாகத் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் பாதுகாப்புப் படை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காகத் தாங்கள் தாக்கிய அமெரிக்க வான்படைத் தளம் எந்த நாட்டில் அல்லது எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்ற இருப்பிட விபரங்களை ஐஆர்ஜிசி (IRGC) அமைப்பு தற்போது வரை வெளிப்படையாக விவரிக்கவில்லை.
குவைத் நாட்டில் அலறும் சைரன்கள்
மத்திய கிழக்கின் இந்த திடீர் ராணுவ மோதல்களின் எதிரொலியாக, அண்டை நாடான குவைத் தேசம் முழுவதும் தற்போது உச்சக்கட்டப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து, குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) உடனடியாக ஆன் செய்யப்பட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில் குவைத் நாடு முழுவதும் தற்போது ஆபத்தை எச்சரிக்கும் அவசரக்கால சைரன்கள் (Sirens ringing) ஒலித்து வருகின்றன. எதிரி நாட்டு ஏவுகணைகள் தங்களின் வான் எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகக் குவைத் ராணுவம் தங்களின் எல்லைப் பகுதிகளில் முழு வீச்சில் வான் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்













Click it and Unblock the Notifications