போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ! உ.பி.யில் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் ஊர்க்காவல் படைவீரர் ஒருவரை பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உ.பி.மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களின் அட்டகாசம் தொடர்கிறது. ஒன்வேயில் செல்வதை தடுத்த ஊர்காவல் படை வீரரை பாஜக எம்.எல்.ஏ., ஒருவர், கன்னத்தில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு, 3 மாதங்களுக்கு முன் பதவியேற்றது. அப்போது முதல் அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சோதனை சாவடி ஊழியர் ஒருவரை தாக்கினார். கோரக்பூர் பாஜக எம்.எல்.ஏ. பெண் போலீஸ் அதிகாரியை மக்கள் முன்னிலையில் வசைபாடியுள்ளார். அந்த வகையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ., சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முகமதாபாத் கோனா தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ஸ்ரீராம் சன்கார். இவர் சென்ற செவ்வாய்கிழமை, லக்னோ நகரில் தனது சொகுசுக் காரில் சென்றார். மாநில தலைமை செயலகத்திற்கு செல்ல, போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு வழிச்சாலை வழியாக அவர் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஊர்காவல் படை வீரர் அமித் சரின், அந்த காரை நிறுத்தி சுற்றிக் கொண்டு செல்லும்படி கூறினார். ஆனால்கா ரில் இருந்த எம்.எல்.ஏ., 'சுற்றி சென்றால் 3 கி.மீ. பயணிக்க வேணடும். 300 மீட்டர் தூரத்தில் உள்ள தலைமை செயலகத்திற்கு இந்த வழியில் தான் செல்வோம்' என கூறி வாக்குவாதம் செய்தார். அதோடு நிற்காமல் அவர், அந்த ஊர்காவல் படை வீரர் கன்னத்தில், பளாரென அறைந்தார்.
இது உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications