“மிஸ் அன்டர்ஸ்டான்டிங்! ரிவாபா ஜடேஜா என் தங்கச்சிங்க..” வாய் தகராறு குறித்து பாஜக எம்பி விளக்கம்
காந்திநகர்: பாஜக எம்பியுடன் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியும் குஜராத் சட்டமன்ற உறுப்பினருமான ரிவாபா வாய் தகராறில் ஈடுபட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாஜக எம்பி இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டில் ஒரு பக்கம் அடித்து ஆடிக்கொண்டிருக்க, மறுபக்கம் அவரது குடும்பம் அவரும் அரசியல் நோக்க மெல்ல நகர தொடங்கினர். அப்படியாகதான் ஜடேஜாவின் மனைவி ரிவாபாவுக்கு குஜராத் மாநிலத்தில் பாஜக சார்பில் ஒரு எம்எல்ஏ சீட் ஒதுக்கப்பட்டது. ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்று எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார். எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு கூட முடியாத நிலையில் சில சர்ச்சைகளில் ரிவாபா சிக்கி வருகிறார்.

அதாவது இவருக்கும் இவருக்கு சீட் ஒதுக்கிய பாஜகவை சேர்ந்த ஜாம்நகர் எம்பி பூனம் பெண் மாடத்திற்கும் அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில்தான் சுதந்திர தினத்தையொட்டி ஜாம் நகரில் புதியதாக அமைக்கப்பட்ட போர் நினைவு சின்னத்திற்கு மரியாதை செலுத்த இவர்கள் இருவரும் சென்றனர். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள், மேயர் ஒருவர் என பாஜகவின் பெரும் படையே நினைவு சின்னத்திற்கு அணிவகுத்து சென்றது.
அப்போதுதான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, நினைவு சின்னத்திற்கு உள்ளே போகும்போது ரிவாபா தனது செருப்பை வெளியில் கழற்றிவிட்டு சென்றிருக்கிறார். இதனை பார்த்த எம்பி பூனம் மாடம், "ஓவர் ஸ்மார்ட்டாக நடந்துக்கொள்ளாதே" என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அவ்வளவுதான் இதை கேட்ட மாத்திரத்தில் சம்பவ இடத்திலேயே ரிவாபா பொங்கியுள்ளார். என்னை பார்த்து எப்படி நீ அந்த மாதிரி சொல்லலாம் என்று கேட்டு வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை சண்டையை தடுக்க முயன்ற மேயருக்கும் டோஸ் விழுந்திருக்கிறது. பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளோ என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்துக்கொண்டிருந்துள்ளனர். நேரம் ஆக ஆக வாய்தகராறு அதிகரித்திருக்கிறது. போலீஸ் அதிகாரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் என எல்லோர் முன்னிலையில் தன்னை ரிவாபா திட்டிக்கொண்டிருப்பதை தாங்காத எம்பி பூனம் மாடம், தான் பேசியது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
ஆனால் ரிவாபா அதை ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ரிவாபாவை உடன் இருந்த அதிகாரிகள் நைசாக வெளியே அழைத்து சென்றனர். இதனையடுத்து சம்பவம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் இது தொடர்பான வீடியோ நேற்று முதல் சோஷியல் மீடியாக்களில் பயங்கர டிரெண்டிங்கில் சென்றுக்கொண்டிக்கிறது. எனவே இதற்கு முடிவுகட்ட இன்று எம்பி பூனம் மாடம் செய்தியாளர்களை சந்தித்து சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், "நாங்கள் பேசிக்கொண்ட வீடியோ வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக ஒரு குடும்பம். ரிவாபா எனது தங்கை. என்னிடம் கோவப்படுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. நேற்று நடந்த சம்பவத்தில் சில தவறான புரிதல் ஏற்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications