உபி, உத்தரகாண்டில் முதல்வர்கள் யார்… முடிவெடுக்கக் கூடியது பாஜக ஆட்சிமன்றக் குழு
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர்கள் யார் என்ற முடிவெடுப்பதற்கான பாஜக ஆட்சிமன்றக் குழு இன்று டெல்லியில் கூடியது.
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜக அம்மாநில முதல்வர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் கூடியது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 6 மணியளவில் ஆட்சி மன்றக் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

312 தொகுதிகளுடன் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று உத்தரப்பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, மாநில பாஜக துணைத் தலைவர் தினேஷ் சர்மா, எம்.பி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சத்பால் மகராஜ் முதலமைச்சருக்கான போட்டியில் உள்ளார்.
பாஜகவின் ஆட்சிமன்றக் குழு தற்போது கூடியுள்ள நிலையில், விரைவில் உபியிலும், உத்தரகாண்டிலும் யார் முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது உறுதியாகிவிடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications