Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலுக்கு 10 நாள் கூட இல்லை.. அமித் ஷா கைகளுக்கு போன முக்கியமான ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் மம்தா

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் அங்கு பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே போட்டி கடுமையாக உள்ளது. இதற்கிடையே அங்கு பாஜகவின் தேர்தல் சாணக்கியராகக் கருதப்படும் அமித் ஷா இறங்கி வேலை செய்து வருகிறார். இதற்கிடையே மேற்கு வங்க தேர்தல் தொடர்பாக முக்கியமான ஒரு ரிப்போர்ட் பாஜக தலைமை கைகளுக்கு சென்றுள்ளதாம்.

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு 10 நாட்கள் கூட இல்லாத நிலையில், அங்குத் தேர்தல் தீவிரமடைந்துள்ளது. அங்கு பாஜக "வந்தே மாதரம்" முழக்கத்தோடு தேர்தலைச் சந்திக்கும் நிலையில், மம்தா "ஜாய் பங்களா" கோஷத்துடன் தேர்தலைச் சந்திக்கிறது. இப்படி மேற்கு வங்கத்தில் தேர்தல் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

BJP plan for West Bengal Election Amit Shah to Camp for 15 Days Internal Survey Predicts 125 Seats

அமித் ஷா

2021ல் பாஜக கணிசமான இடங்களில் வென்ற நிலையில், 2026ல் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. குறிப்பாக பாஜகவின் 'சாணக்கியர்' அமித் ஷா நேரடியாகவே மேற்கு வங்க களத்தில் குதித்துள்ளார். இதற்கிடையே பாஜகவின் உட்கட்சி சர்வே தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் இந்த முறை பாஜக கணிசமான இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வழக்கமாக ஒரு மாநிலத்திற்குத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள், வந்துவிட்டு உடனே கிளம்பிவிடுவார்கள். ஆனால், இந்த முறை அமித் ஷா வேறு ரூட்டில் பயணிக்கிறார். அதாவது மேற்கு வங்காளத்தில் தொடர்ச்சியாக 15 நாட்கள் முகாமிடப் போகிறார் அமித் ஷா. ஒவ்வொரு மண்டலத்திலும் தங்கி, அடிமட்டத் தொண்டர்களுடன் இரவு நேர ஆலோசனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

அந்த 40 தொகுதிகள்

கடந்த முறை 200 இடங்கள் என்ற முழக்கத்தோடு களத்தில் இறங்கிய பாஜக, 77ல் வென்றது. இந்த முறை அதேபோல மிஸ் ஆகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாகக் கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற இடங்களைக் குறிவைத்து இந்த முறை 'ஸ்பெஷல் ஆபரேஷன்' நடக்கிறது. அதற்காகவே அமித் ஷா அங்கேயே முகாமிட்டுள்ளார்.

மேற்கு வங்கத் தேர்தலின் மிகப் பெரிய வில்லன் என்றால் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தான். 2021-ல் நடந்த கசப்பான சம்பவங்களால் தொண்டர்கள் பயந்து போய் இருக்கிறார்கள். இதை அமித் ஷா நேரடியாகவே குறிப்பிட்டுப் பேசினார். அவர் மேலும், "திரிணாமுல் ஆட்கள் மிரட்டினால், அவர்கள் தேர்தல் முடிவுக்குப் பிறகு விளைவுகளைச் சந்திப்பார்கள்" என நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்புப் படைகள்

வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க மேற்கு வங்க தேர்தலுக்காக 2,550 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதில் 500 கம்பெனிகள் தேர்தல் முடிந்த பிறகும் அங்கேயே தங்கி அமைதியைப் பாதுகாக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தடுக்க இந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களமிறங்கும் ஜாம்பவான்கள்

மேலும், மேற்கு வங்க தேர்தலில் பாஜகவை வழிநடத்தப் பல ஜாம்பவான்களைக் களமிறக்கியுள்ளனர். மகாராஷ்டிரா (2024) மற்றும் மத்தியப் பிரதேச வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த மூளையான பூபேந்தர் யாதவ் தான் இப்போது பெங்கால் தேர்தல் இன்-சார்ஜ். திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் தேப் மற்றும் அமித் ஷாவின் நிழலாகக் கருதப்படும் நித்யானந்த் ராய் ஆகியோர் பல வாரங்களாக வங்காளத்திலேயே தவம் கிடக்கிறார்கள். அந்தளவுக்கு மேற்கு வங்கத்தை சீரியஸாக கருதி பாஜக இறங்கி வேலை செய்து வருகிறது.

இதற்கிடையே பாஜகவின் உட்கட்சி சர்வே ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் தற்போதிருக்கும் நிலைமையில் பாஜக 115 - 125 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. ஊடுருவல் மற்றும் ஊழல் விவகாரங்களால் மக்கள் திரிணாமுல் தலைவர்கள் மீது அதிருப்தியில் இருப்பதும் இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மம்தாவின் இமேஜும் திரிணாமுலின் தொண்டர்கள் பலமும் தங்களுக்கு சவால் என்பதையும் பாஜக உட்கட்சி சர்வே ஒப்புக்கொள்கிறது.

இலக்கு என்ன

மேற்கு வங்கத்தில் 294 இடங்கள் உள்ள சூழலில், 148 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியை அமைக்கும். இப்போது 125 வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அப்படியே 150ஆக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் டார்கெட். இதற்காகவே அமித் ஷா தொடங்கி முக்கிய தலைவர்கள் அங்கு இறங்கி வேலை செய்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+