பாஜக ராஜ்யசபா எம்.பி நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.. ஆம் ஆத்மியில் சேர திட்டம்
டெல்லி: ராஜ்யசபாவில் பாஜக நியமன எம்.பியாக பணியாற்றி வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்; அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் கிரிக்கெட் வீரரான பஞ்சாப்பை சேர்ந்த சித்து, தனது சிக்சர் விளாசும் பேட்டிங் ஸ்டைலை போலவே, அதிரடி பேச்சுக்கு சொந்தக்காரர். கிரிக்கெட் வர்ணையாளராகவும் உள்ளார்.

பாஜகவின் நீண்டகால உறுப்பினராக இருந்த சித்துவிற்கு ராஜ்யசபா நியமன எம்.பி பதவியை பரிசாக அளித்தது அக்கட்சி. இந்நிலையில், தனது எம்.பி பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார். இதை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்காக எம்.பி பதவியை சித்து, ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப்பில் பாஜக-ஷிரோன்மணி அகாலிதள ஆட்சி நடக்கிறது. 2012ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து, பாஜக சார்பில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் சித்து ராஜினாமா பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா போன்ற டெல்லியை ஒட்டிய மாநிலங்களில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications