பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், இரண்டும் பெண்களின் முன்னேற்றத்தை முற்றிலுமாக வெறுக்கிறது: ராகுல் காந்தி பேச்சு
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இரண்டும் பெண்களின் முன்னேற்றத்தை முற்றிலுமாக வெறுக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
ஷில்லாங் : பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இருவருமே இந்தியா முழுக்க ஒற்றைச் சிந்தனையை நிறுவ முயற்சிக்கிறார்கள் அதுபோலவே, பெண்களின் முன்னேற்றத்தையும் முற்றிலும் வெறுக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை மேகாலயா மாநிலத்தில் துவங்கி உள்ளார்.

மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இருவரும் இந்தியா முழுக்க கூட்டாட்சி தத்துவத்தைச் சீரழித்து ஒற்றைச் சிந்தனையை நிறுவ முயற்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை நிறுவுவதன் மூலம் அவர்களின் கலாச்சாரம் , பண்பாடு, வாழ்வியல் முறை, மொழி ஆகியவற்றை அழித்து அதன் மூலம் இந்தியா முழுவதையும் ஒரே தத்துவத்தை நிறுவப்பார்க்கிறார்கள்.
ஒருவேளை பாஜக மேகாலயாவில் ஆட்சி அமைத்துவிட்டால் படிப்படியாக மேகாலயாவை இந்து நிலப்பரப்பாக்கி விடுவார்கள். அதை எதிர்த்துப் போராட மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், பெண்களின் முன்னேற்றத்தை பாஜக அரசும், ஆ.எஸ்.எஸ் அமைப்பும் முற்றிலுமாக வெறுக்கிறது. அவர்களின் திட்டங்களும், செயல்பாடுகளும் மீண்டும் பெண்களை வீட்டிற்குள்ளே முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதைப் போல இருக்கிறது.
நம் நாட்டில் சமீப காலங்களாக பெண்கள் அனைத்து துறைகளும் சாதனை படைத்து வருகிறார்கள். இதை விரும்பாத பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மீண்டும் பெண்களை அடிமைப்படுத்தவே முனைகிறது.
காங்கிரஸ் கட்சியின் அனைத்து படி நிலைகளும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலோ, பாஜகவிலோ அப்படி ஒரு நிலை இருக்கிறதா என்று மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications