நிதிஷ், லாலுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா- நிதிஷுக்கு புகழாரம்!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் அபார வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரை பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மிக உன்னதமான தலைவரான நிதிஷ்குமார் நல்ல நிர்வாகத்தை தருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தது முதல் பா.ஜ.க. தலைமையுடன் மோதி வருகிறவர் அக்கட்சியின் மூத்த தலைவரான எம்.பி. சத்ருகன் சின்ஹா. பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கொடிபிடித்தவர்.
.@ShatruganSinha meets @NitishKumar after #BiharResults #PhotoBlog pic.twitter.com/l0UH4UZYvc
— India Today (@IndiaToday) November 9, 2015 பீகாரில் திடீரென பிரசார கூட்டங்களை பிரதமர் மோடி ரத்து செய்த போது, இது வாக்காளர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தவர். எதிர்க்கட்சியாக இருந்த போதும் நிதிஷ்குமாருடன் நெருக்கமாக இருந்ததால் பா.ஜ.க. கடும் கோபத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இன்று பாட்னாவில் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து கட்டித் தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் சத்ருகன் சின்ஹா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சத்ருகன் சின்ஹா, இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. இது பா.ஜ.க.வை சங்கடப்படுத்தாது. அப்படி பா.ஜ.க. சங்கடமாக நினைத்தால் நான் கட்சியில் இருக்க முடியாது.
நான் பாரதிய ஜனதாவுக்கு எதிரி அல்ல. அக்கட்சிக்காக பல ஆண்டுகாலம் உழைத்திருக்கிறேன். நிதிஷ்குமார் உன்னதமான தலைவர்.. அவர் நல்ல நிர்வாகத்தை பீகார் மக்களுக்காக தருவார் என்றார்.
இதனைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவையும் சத்ருகன் சின்ஹா சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications