மாட்டுக்கறி சாப்பிடுவோம்னு சொல்லி சரண்டராகியும் ஓட்டு கிடைக்கலையே.. மேகாலயாவில் பரிதாப பாஜக!
மாட்டுக்கறி விவகாரத்தில் சரணடைந்தாலும் பாஜகவால் கணிசமான இடங்களை மேகாலயாவில் பெற முடியவில்லை
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற கனவில் 60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாஜகவால் தற்போது வரை 6 இடங்களில்தான் வெல்ல முடிந்துள்ளது. இத்தனைக்கும் மாட்டுக்கறியையும் சாப்பிடுவோம்; மாட்டுக்கறிக்கு தடை விதிக்கமாட்டோம் என்றெல்லாம் பாஜக பிரசாரம் செய்தும் மேகாலயா வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா மாநில சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 60 இடங்களில் தனித்து போட்டியிட்டது. 2018-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 47 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. ஆனால் அதிக இடங்களைப் பெற்ற என்பிபி கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக என்பிபி கட்சி, பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனித்துப் போட்டியிட்டது.

மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையான வாக்காளர்கள். இம்மாநிலத்தில் மாட்டிறைச்சி பிரதான உணவுகளில் ஒன்று. ஆனால் நாட்டின் பல பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனையை கடுமையாக எதிர்க்கிறது பாஜக. அக்கட்சி ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
மாட்டிறைச்சி விவகாரம் மேகாலயா சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது. ஒருகட்டத்தில் மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ் மாவ்ரி, மாட்டிறைச்சிக்கு ஆதரவாக பேசியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பாக மாவ்ரி கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது பற்றி நான் பேச முடியாது. ஆனால் மாட்டிறைச்சி சாப்பிட பாஜக தடை விதிக்கவில்லை. நானும் மற்றவர்களைப் போல மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஒருவராலும் தடுக்க முடியாது. மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்யவும் முடியாது என்றார். மேலும் பாஜக, கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்பது பொய். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்படவே இல்லை என்றும் மாவ்ரி கூறியிருந்தார்.

தற்போது மேகாலயா சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 60 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பாஜகவால் 6 இடங்களில்தான் முன்னிலை பெற முடிந்துள்ளது. பாஜகவின் மாட்டுக்கறி சரண்டர் அரசியல் அப்படி ஒன்றும் மேகாலாயாவில் கை கொடுக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்துகின்றன.
அதேநேரத்தில் மேகாலயாவில் என்பிபி கட்சி தனிப்பெரும் கட்சியாக 20க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் பெரும்பான்மைக்குரிய 31 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் இணைந்துதான் என்பிபியால் மேகாலயாவில் ஆட்சி அமைக்க முடியும். ஆகையால் இம்முறையும் மேகாலயாவில் கூட்டணி ஆட்சியில் பாஜக ஒட்டிக் கொள்ளக் கூடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications