‛‛வியந்துபோன சு.சாமி’’.. அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம்.. புகழ்ந்தது யாரை தெரியுமா? செம ட்விஸ்ட்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று தரிசனம் செய்தார். இந்த வேளையில் ராமர் சிலை அருகே சென்று தரிசித்த சுப்பிரமணியன் சாமி ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த கருத்து தான் கவனம் பெற்றுள்ளது.
நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடந்த 18 ம் தேதி கோவிலில் 5 வயது நிரம்பிய பால ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

கோவில் கருவறை சென்று சிலைக்கு பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. கும்பாபிஷேக நாளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். காலை 6.30, மதியம் 12 மணி, இரவு 7.30 மணிக்கு என 3 வேளை ஆரத்தி நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதிலும் மக்கள் பாஸ் பெற்று பங்கேற்கலாம். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை முதலே கோவிலுக்கு செல்ல பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
‛‛மூடப்படும் கதவுகள்’’.. தினமும் ஒரு மணிநேரம் அயோத்தி ராமருக்கு ஓய்வு..ஏன் தெரியுமா? காரணம் பாருங்க
இந்நிலையில் தான் நேற்றைய தினம் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்தார். பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை பூஜை செய்ய சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி மனைவியை கைவிட்டவர் என்கூறி விமர்சனமும் செய்தார். இத்தகைய சூழலில் தான் அயோத்தி ராமர் கோவிலில் நேற்று சுப்பிரமணியன் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு சென்ற சுப்பிரமணிய சுவாமியை நிர்வாகிகள் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். பால ராமரை சுப்பிரமணிய சுவாமி தரிசனம் செய்தார். மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
மனைவியை கைவிட்ட மோடி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பூஜை செய்வதா? சு.சாமி சர்ச்சை
Dr @Swamy39 in #RamMandirAyodhya Today along with RamMandir Temple Committe General Secretary Shri @ChampatRaiVHP Shri @jagdishshetty @rameshnswamy @govindharir #Ayodhya #RamMandir @VHPDigital pic.twitter.com/xgdOppxbC7
— Tejas (@NAVANGULTEJAS) February 17, 2024
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்த போட்டோக்களை சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛இன்று (அதாவது நேற்று) அயோத்தியில் ராம் லல்லா சிலையை அருகில் பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளரும், கட்டுமான இயக்குநருமான சம்பத் ராயின் திறமையான வழிக்காட்டுதலால் 4 படி ராமர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணி என்னை வியக்க வைக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
பாஜகவினரை பொறுத்தமட்டில் பிரதமர் மோடி தான் அயோத்தி ராமர் கோவிலை கட்டியதாக கூறி வருகின்றனர். ஆனால் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடி பற்றி எதுவும் கூறாமல் சம்பத் ராயை பெருமையாக பேசியுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி எதிர்ப்பில் உறுதியாக இருப்பது தெளிவாகி உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications