25 ஆண்டுகளாக இடைவிடாமல் முயற்சிக்கும் மேகாலயாவில் 3 இடங்களை தாண்ட முடியாத பாஜக
மேகாலயாவில் 25 ஆண்டுகளாக பாஜக பகீர முயற்சியும் மேற்கொண்டும் அதிகபட்சம் 3 இடங்கள்தான் கிடைத்திருக்கிறது.
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக இடைவிடாமல் போட்டியிட்டு வரும் பாஜக அதிகபட்சமாக 3 இடங்களை தாண்டியது இல்லை.
திரிபுராவில் 4 ஆண்டுகால உழைப்பின் பயனை பாஜக அறுவடை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்களை வளைத்துப் போட்டு அதன் வாக்கு வங்கியை நோகாமல் மடை மாற்றிவிட்டது பாஜக.
ஆனால் மேகாலயா மாநிலத்தின் கதையோ வேறு... அங்கு 25 ஆண்டுகாலமாக பல சட்டசபை தேர்தல்களை பாஜக சந்தித்து கொண்டே வருகிறது. ஆனால் அதிகபட்சம் 3 இடங்களைத்தான் பாஜகவால் பெற முடிந்திருக்கிறது.

1993-ம் ஆண்டு முதல் போட்டி
மேகாலயாவில் 1993-ம் ஆண்டு 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. ஒரு இடத்திலும் வெல்லவில்லை பாஜக. 14 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது.

3 இடங்களை வென்ற பாஜக
1998-ம் ஆண்டு மேகாலயா சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 3 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. இதுதான் அதிகபட்சமாக மேகாலயாவில் பாஜக வென்ற இடங்கள்.

பாஜக படுதோல்வி
2003-ம் ஆண்டு 2 தொகுதிகள், 2008-ம் ஆண்டு 1 தொகுதி-ல் பாஜக வென்றது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் பாஜக எந்த தொகுதியிலும் வெல்லவில்லை.போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் பறிகொடுத்தனர்.

வென்ற கதை இதுதான்
தற்போதைய தேர்தலில் பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் இந்த 2 பேருமே சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். தேர்தலுக்கு முன்புதான் பாஜகவில் ஐக்கியமாகினர். கால் நூற்றாண்டாக பாஜகவும் எவ்வளவோ முயற்சித்து பார்க்கிறது மேகாலயாவில்... ஆனால் எதுவும் சாதகமாக இல்லை அந்த கட்சிக்கு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications