பாஜகவினர் "குடிப்பதற்கு" தடை விதிக்க வேண்டும்.. சாமி அட்வைஸ்!
பாஜகவினர் குடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை வழங்கியுள்ளார்.
டெல்லி: பாஜகவினர் மேற்கத்திய ஆடைகளை அணிய கூடாது என்றும் கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கையாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பாஜக அமைச்சர்கள் மேற்கத்திய ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக இந்திய பருவநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும். மேற்கத்திய ஆடைகள் வெளிநாட்டினரால் திணிக்கப்பட்டவை.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி , யாரும் மது குடிக்கக் கூடாது. எனவே கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை பாஜக தலைமை உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Western dress is a foreign imposed slavishness. BJP should make it of party discipline for Ministers to wear Indian climate friendly clothes
— Subramanian Swamy (@Swamy39) December 26, 2017
நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் நடைபெற்ற பண்டிட் மதன் மோகன் மால்வியாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை என்று நேற்றைய டுவீட்டில் சுவாமி கூறியிருந்தார்.
Article 49 of Const directs alcohol drinks be banned. While I am not for penal action, BJP should make as part of party discipline.
— Subramanian Swamy (@Swamy39) December 26, 2017
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு இந்தியா இன்னும் அடிமையாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தியில் எதற்கு ராமர் கோயில் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் பேச சுவாமியை பல்கலைக்கழகம் அழைத்தது.
பின்னர் அந்த நிகழ்ச்சியை அந்த பல்கலைக்கழகம் ரத்து செய்தது. இதற்கு சுவாமி, ஜேஎன்யூ பல்கலைக்கழகம் எனது சித்தாந்தங்கள் இளைஞர்களை கவரும் என்பதால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
மாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்டவற்றை பாஜக அதிரடியாக செய்து வரும் நிலையில் அந்த கட்சிக்கே இதை உடுத்தக் கூடாது, இதை உண்ணக் கூடாது என்று சுவாமி அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications