காங்கிரஸுக்கு ஓட்டு போட்டதற்காக சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு... பாஜக ஆதரவாளரின் வெறிச்செயல்!
ஜாஜர்: ஹரியானாவில், காங்கிரஸுக்கு ஓட்டு போட்டதற்காக சகோதரரை பாஜக ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 12ந் தேதி ஹரியானாவில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. பல இடங்களில் பாஜக மற்றும் காங்கிரஸார் இடையே மோதல் எழுந்தது. இந்த நிலையில், ஜாஜர் அருகே உள்ள சய்லானா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா. இவர் பாஜக ஆதரவாளர். லோக்சபா தேர்தலின்போது பாஜகவிற்கு ஆதரவாக தீவிர களப்பணி ஆற்றி இருக்கிறார்.

தனது ஒன்றுவிட்ட சகோதரர் ராஜா என்பவரிடம் பாஜக வேட்பாளருக்கு ஓட்டும்படி தேர்தலின்போது தர்மேந்திரா வலியுறுத்தி வந்துள்ளார். வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் காலை, ராஜாவிடம் ஓட்டு போட்டது பற்றி தர்மேந்திரா கேட்டுள்ளார். அதற்கு அவர், காங்கிரஸுக்கு ஓட்டுப்போட்டதாக அசால்ட்டாக பதில் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸுக்கு ராஜா ஓட்டுப்போட்டதை கேட்டதும் தர்மேந்திராவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அப்போது, திடீரென பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜாவை நோக்கி சுட்டுள்ளார். இதில், ராஜா காயமடைந்தார். ராஜாவின் தாயாரும் துப்பாக்கிச் சூட்டில் லேசான காயமடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து தர்மேந்திரா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது தாயாருக்கும் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தர்மேந்திரா துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரிந்தது. அவர் பயன்படுத்தியது உரிமம் இல்லாத சட்டவிரோத துப்பாக்கி என்பதும் தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து நலமாக இருப்பதாக அவரது தாயார் புல்மதி தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவாளரின் இந்த வெறிச் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications