மேகாலயாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. கூட்டணி ஆட்சி அமைக்க என்பிபிக்கு பாஜக ஆதரவு
மேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அங்கு கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது.
ஷில்லாங்: மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை அமைந்த நிலையில் அதிக இடங்களில் வென்றுள்ள என்பிபி கட்சி ஆட்சியை அமைக்க பாஜக ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
மேகாலயாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்கமாவின் என்.பி.பி கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 18 இல்தான் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இந்த நிலையில் கான்ராட் சங்மா புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாஜக, இதர உதிரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தார்.

இந்த நிலையில் என்பிபி பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. இந்த 2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் என்பிபி கட்சி 57 தொகுதிகளிலும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதற்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 74. 32 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் மேகாலயா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் என்பிபி 26 இடங்களில் வென்றுள்ளது. அது போல் காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பாஜக வெறும் இரு இடங்களில் வென்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது, மற்ற கட்சிகள் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிக தொகுதிகளில் வென்ற என்பிபி கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸின் முகமாக இருந்த முகுல் சங்மா கடந்த முறை அக்கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை அழைத்து கொண்டு திரிணமூல் காங்கிரஸில் ஐக்கியமாகினார். அதனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தும் பொறுப்பு அவருக்கு இருந்தது. இதனால் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த அவர் கடுமையாக போராடி வந்தார்.
எனினும் இந்த வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே தொங்கு சட்டசபை அமைந்தால் கூட்டணி அமைக்க தான் தயார் என்பதை என்பிபி தலைவர் கான்ராட் சங்மா தெரிவித்துவிட்டார்.
மேலும் நேற்று முன் தினம் கான்ராட் சங்மா அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை நேரில் சந்தித்து பேசினார். அது போல் அவரும் இன்று என்பிபி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். எனவே மேகாலயாவில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் என்பிபி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டு அவர் காலமானதால் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications