காலை உடைச்சுருவேன்.. மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சியில் பேசும் பேச்சா இது!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சியில் பேசும் பேச்சா இது!

    கொல்கத்தா: எப்பப் பார்த்தாலும் பாஜகவினரை திட்டிக் கொண்டே இருக்கிறீர்களே, உங்களுக்கு வேலை இல்லையா என்று பாஜகவினர் பொறுமுகிறார்கள். ஆனால் என்ன செய்வது.. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் என்னதான் செய்வது.. ஒரு பாஜக மத்திய அமைச்சர் பேசிய பேச்சைப் பாருங்கள். நீங்களே சொல்லுங்கள்.

    மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் நகரில் நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ கலந்து கொண்டார். இவர் டிவி நடிகராக இருந்து, பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சரானவர்.

    BJP Union minister threatens to break a leg

    மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிப் பேசினார். அப்போது திடீரென கூட்டத்தில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்துக் கோபம் கொண்டார். பரிசுகள் வழங்கிக் கொண்டிருந்த அவர் அதை நிறுத்தி விட்டு அந்த நபர் பக்கம் திரும்பினார். மைக்கிலேயே கோபமாக, உங்களுக்கு என்னாச்சு, ஏன் நடந்துட்டே இருக்கீங்க. இந்தப் பக்கம் வாங்க. இங்கேயே நிற்கனும், நகர்ந்தீங்க, காலை உடைச்சு கையில் குச்சியைக் கொடுத்துருவேன் என்று கூறியதோடு, பாதுகாவலரிடம், இவர் இந்த இடத்தை விட்டு நகர்ந்தா காலை உடைச்சுரு என்றும் உத்தரவிட்டார் சுப்ரியோ.

    என்ன கோமாளித்தனமான பேச்சு பாருங்கள். நடப்பது மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சி. வீல் சேர், வாக்கர் கருவிகளை வழங்கிப் பேசுகிறார் அமைச்சர். ஆனால் நடமாடிக் கொண்டுள்ள ஒருவரைப் பார்த்து காலை உடைப்பேன் என்கிறார். என்ன ஒரு மனிதாபிமான மனசு பாருங்க இந்த அமைச்சருக்கு!

    சுப்ரியோவின் இந்த செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு. ஆனால் என்ன செய்வது.. எதிரில் நிற்பவர் சர்வ வல்லமை படைத்த மத்திய அமைச்சராச்சே.. யாரும் எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை.

    சுப்ரியோ இதுபோல பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது முதல் முறையல்ல. மார்ச் மாதம் இதேபோல அசன்சோலுக்கு வந்தபோது, ராம நவமியின்போது கூட்டத்தினரிடையே பேசுகையில், கூட்டத்தினரின் சத்தத்தால் கோபமடைந்து தோலை உரிச்சுருவேன் என்று கோபமாக கத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

    உரிமங்க எசமான் நல்லா உரிங்க, உடைங்க!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+